வணக்கம் நண்பர்களே!
ஒரு ஜாதகத்தில் பித்ருக்களின் தோஷம் என்பது மிகவும் கொடியது என்பதை அனைவரும் அறிவார்கள். பொதுவாக பித்ருக்களுக்கு தோஷம் கழிக்க அவர் அவர்கள் தான் பித்ரு காரியங்களில் ஈடுபடவேண்டுமே தவிர பிறர் பூஜை செய்கிறேன் என்று உங்களிடம் பணம் வாங்கினால் அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்று அர்த்தம்.
பித்ருக்களுக்கு செய்யவேண்டியது உங்களின் கடமை. நீங்கள் இராமேஸ்வரத்தில் போய் செய்தாலும் அந்த பூஜையில் நீங்கள் இல்லாமல் செய்யமாட்டார்கள்.ஏன் உங்களை வைத்து செய்கின்றனர் என்றால் உங்களோடு சம்பந்தப்பட்டவர்க்கு நீங்கள் தான் செய்யவேண்டும் உங்களின் உடல் அங்கு இருக்கவேணடும். இதனை நீங்களே தேடிப்பாருங்கள் இப்படி தான் சாஸ்திரங்களில் இருக்கின்றது. நீங்கள் செல்லாமல் பூஜை நடந்தால் அந்த பித்ருக்கள் உங்களின் மீது அதிக கோபம் தான் படுவார்கள்.
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் விட்டது போல் ஆகிவிடும் உங்களின் நிலைமை. எனக்கு பூஜை செய்வது அவனின் கடமை அவன் வேற ஆளை விட்டு எனக்கு பூஜை செய்கிறானா என்று பித்ருக்கள் கோபபட்டுவிடுவார்கள். குலதெய்வம் மற்றும் பித்ரு காரியங்களுக்கு நீங்கள் முன் நின்று செய்யுங்கள். பிற தெய்வங்களாக இருந்தால் வெளி ஆட்களை வைத்து செய்துக்கொள்ளலாம்.
என்னிடம் ஒரு தொழில் செய்பவர் வந்து எனக்கு பித்ருதோஷம் இருக்கின்றது அதனை நான் சென்று செய்யலாமா அல்லது நீங்கள் செய்வீர்களா என்று கேட்டார். அதற்கு அவரிடம் குலதெய்வத்திற்க்கு மற்றும் பித்ருக்களுக்கு செய்வது எல்லாம் உங்களின் கடமை அதனை நீங்கள் தான் செய்யவேண்டும். நான் செய்யமாட்டேன் என்று சொல்லி அனுப்பினேன்.
என்னால் முடியும் என்றாலும் எனக்கு சொல்லிக்கொடுத்த குரு. இதனை இதனை இவர்கள் தான் செய்யவேண்டும் என்று ஒரு கட்டளை இட்டுருகிறார். அதனை மீறி செய்யகூடாது. உங்களின் கடமையை நீங்கள் தான் செய்யவேண்டும். ஆன்மீகவாதிகள் ஒரு எல்லையை மீறி செயல்படகூடாது.
உலகத்தில் உள்ள ஆன்மீகவாதிகளால் தான் பாதி சாபத்தை நீங்கள் பெறுகின்றீர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். ஆன்மீகவாதியை தேடிச்செல்வதை மக்கள் நிறுத்தினாலே போதும் மக்களுக்கு இருக்கின்ற தோஷம் குறையும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
2 comments:
Sir
What are the general planetary conditions present,in a horoscope, for the Pitru Dosha .
வணக்கம் பழைய பதிவுகளில் கொடுத்திருக்கிறேன் நண்பரே தேடிப்பாருங்கள். நன்றி
Post a Comment