வணக்கம் நண்பர்களே!
சோதிடம் நமது மதத்திற்க்கு கிடைத்தது ஒரு அற்புதமான விசயம். நாம் செல்லும் வழியைப்பற்றி தெரிந்துக்கொண்டு அந்த வழியில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று முன்னாடியே நாம் தெரிந்துக்கொள்ளமுடிகிறது.
நாம் தெரிந்துக்கொண்டாலும் அந்த வழியில் மிகப்பெரிய பிரச்சினை வருகிறது என்று தெரிந்தால் அந்த பிரச்சினையின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் முடிகிறது. தப்பிக்கமுடியவில்லை என்றாலும் மனதளவில் நாம் தயாராகிவிட்டால் நாம் மனதளவில் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்கிறோம்.
ஒரு சிலர் ஜாதகத்தை பார்த்துவிட்டு அப்படியே இருந்துக்கொண்டு விடுகிறார்கள். பிரச்சினையில் இருந்து தப்பிக்க வழியை தேடுவதில்லை. வருவது வரட்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். அது தவறு. அவர் ஒரு நபராக இருந்தால் பரவாயில்லை. அவரின் குடும்பமே பாதிக்கப்படுகிறது என்றால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் அல்லவா.
ஒரு வழி தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம் ஆண்டவன் அடுத்தவழியையும் வைத்திருப்பான் அதனை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளமுடியும் ஆனால் நமது பிடிவாத குணத்தால் அந்த வழியை நாம் தேர்ந்தெடுக்கமுடியாமல் இருக்கின்றோம்.
உங்களின் பிடிவாத குணத்தை விட்டுவிட்டு அடுத்தவழி என்ன என்று உங்களின் ஜாதகத்தை எடுத்த பாருங்கள். உங்களுக்கு தெரியவில்லை என்றால் அனுப்பி கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கான வழியை நான் அல்லது உங்களின் ஆஸ்தான சோதிடர்கள் காட்டுவார்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
5 comments:
ஹலோ ராஜேஷ் , எந்த ஒரு பிராத்தனையும் , யாருக்காக பிராத்தனை செய்கிறோமோ அவர்களுக்கு தெரியாமல் செய்யும்பொழுது எந்த அளவுக்கு அது பலனளிக்கும் ?
உண்மை தான். பிடிவாதங்களை தளர்த்தினால் பல பிரச்சனைகள் தவிர்க்கப்படும். அதனால் தானோ என்னவோ நீ அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்காம தப்பிக்கவா பார்க்கிற. நீ இதை அனுபவின்னு கூடவே பிடிவாதத்தையும் கொடுத்திடுவார் போல.
Dear sir
Thanks for this nice advice.
I am born in Christian. We don't have time of birth. How to calculate and write the jadagam.
What is the solution for this?
Thanks
Antony
பிடிவாதம் என்றதும் தான் வலைத்தளத்தில் படித்து சுவைத்த ஒரு நிகழ்வை இங்கே பகிர தோன்றுகிறது:
சுவாமி விவோகனந்தரும் அவருடைய தோழியும் ஒரு நீச்சல்குளத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்தனர். அந்தபெண்மணி தன் உள்ளங்கைகளில் தண்ணீர் ஏந்தி இருந்தால் தண்ணீர் அப்படியே அவள் கையில் இருந்தது
விவோகனந்தர் அந்த நீரைச்சுட்டிக்காட்டி இது தான் அன்பு.உன் கையில் உள்ள நீர் உனக்கே சொந்தம் என்று நினைத்து, உன் கைக்குள் மூடமுயற்ச்சித்தால் அந்த நீர் வெளியே சொல்ல முயற்ச்சிக்கும்
மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான். அவர்கள் தாங்கள் அன்பு செலுத்துபவரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அழுத்த பார்க்கிறார்கள் அதனால் நீரைப்போல அவர்களும் வெளியே ஒடப் பாக்கிறார்கள்
நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்தினால்
அவரை சுகந்திரமாக இருக்க அனுமதியுங்கள்
உண்மையான அன்பு என்பது எதையும் கொடுக்கும்
எதையும் திரும்ப எதிர்பார்க்காது அறிவுரை சொல்லும்
கட்டளையிடாது பிடிவாதம் செய்யாது
இது தான் உண்மையான அன்பின் ரகசியம் என்றார்.
பிடிவாதத்தைப் பற்றி சொல்லும் போது முகநூலில் படித்து சுவைத்த நிகழ்ச்சி ஒன்றை இங்கே பகிர விழைகிறேன்...
----------------------------------
சுவாமி விவோகனந்தரும் அவருடைய தோழியும் ஒரு நீச்சல்குளத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்தனர். அந்தபெண்மணி தன் உள்ளங்கைகளில் தண்ணீர் ஏந்தி இருந்தால் தண்ணீர் அப்படியே அவள் கையில் இருந்தது
விவோகனந்தர் அந்த நீரைச்சுட்டிக்காட்டி இது தான் அன்பு.உன் கையில் உள்ள நீர் உனக்கே சொந்தம் என்று நினைத்து, உன் கைக்குள் மூடமுயற்ச்சித்தால் அந்த நீர் வெளியே சொல்ல முயற்ச்சிக்கும்
மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான். அவர்கள் தாங்கள் அன்பு செலுத்துபவரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அழுத்த பார்க்கிறார்கள் அதனால் நீரைப்போல அவர்களும் வெளியே ஒடப் பாக்கிறார்கள்
நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்தினால்
அவரை சுகந்திரமாக இருக்க அனுமதியுங்கள்
உண்மையான அன்பு என்பது எதையும் கொடுக்கும்
எதையும் திரும்ப எதிர்பார்க்காது அறிவுரை சொல்லும்
கட்டளையிடாது பிடிவாதம் செய்யாது
இது தான் உண்மையான அன்பின் ரகசியம் என்றார்.
----------------------------------
ஞானிகள் அறிந்த உண்மை. ஆனால் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத உண்மை இது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவுக்கு மிஞ்சிய அன்பினால் நம் அன்புக்குரியவர்கள் மீது நம் ஆசைகளை திணிக்கும் போது அவர்களும் கலங்கி நம்மையும் கலக்கி பிடிவாதகாரர்களாக மாற சாத்தியக் கூறுகள் உள்ளன. நான் அறிந்தவரை பிறக்கும் போதே எவரும் பிடிவாதகாரர்களாக பிறப்பதில்லை. சூழ்நிலையும் சுற்றியுள்ளவர்களுமே பிடிவாதக்காரர்களாக மாற்றுகிறார்கள்.
அதாவது
நாம்...
நமக்கு பிடித்தவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறோம்...
அவர்களோ...
திணிக்கப்படுவதால் பிடிவாதம் பிடிக்கின்றனர்...
இருவர் மீதும் தவறில்லை...
ஆனால் இதனால் இருவருக்கும் மன கஷ்டமே பலனாகிறது...
ஆனால்...
அதையே அறிவுரையாக சொன்னால்...
அதாவது
எது செய்தால் என்ன விளைவு என்று சொல்லி
அதன் பின் உன் இஷ்டம் என்றால் சீர்தூக்கி பார்க்க வாய்ப்பு வரலாம். இல்லையென்றால் பட்டுத் திருந்தி “அன்றே சொன்னதை கேட்டிருக்கலாம் என்று வருந்தி“ இனிவரும் காலங்களில் உங்கள் வழிகாட்டுதல் படி நடக்க சாத்தியக் கூறுகள் 99% உண்டு.
Post a Comment