Followers

Wednesday, March 5, 2014

கேள்வி & பதில்



வணக்கம் நண்பர்களே!

**நமது உடல் என்ன ஆகும் என்று காட்டும் இடமும் இது தான். நமது உடலை எரிக்க செய்வார்களா அல்லது புதைக்க செய்வார்களா அல்லது ஏதாவது ஒரு உயிரனத்திற்க்கு தானம் செய்வார்களாக என்று கூட சொல்லமுடியும்.**
இதை பற்றி சற்று தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைக்க வேண்டுகிறோம்...
நன்றி.

தங்களின் கேள்வி வழியாக பல பேருக்கு புரியவைப்பதற்க்காக பதிவில் சொல்லுகிறேன். ஒரு சோதிடர் என்றால் சும்மா சோதிடத்தை படிக்ககூடாது. உள்தேடுதலுக்காக சோதிடத்தை படிக்கவேண்டும். ஒரு ஜாதகத்தை பார்த்தால் இதுவரை எத்தனை ஜென்மங்கள் எடுத்து இருப்பான். இனி எத்தனை ஜென்மம் எடுப்பான் என்பதைப்பற்றி வெளியில் சொல்லாவிட்டாலும் நமக்கு தெரியவேண்டும். அந்த விபரங்கள் தெரிந்தால் தான் நம்மிடம் வரும் நபர்களுக்கு நாம் நல்லது செய்யமுடியும்.

ஒரு நபர் இறக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அந்த நபரின் உடல் என்ன ஆகும் என்பதை பார்ப்பதற்க்கு சோதிடத்தில் வழி இருக்கிறது. அந்த வழியை பயன்படுத்தி அந்த உடல் எப்படி போய் சேரும் என்பதை பார்க்கலாம். இந்துக்களில் பெரும்பாலும் இறந்த பிறகு எரிப்பார்கள். ஒரு சிலர் இறந்த உடலை புதைப்பார்கள். வடமாநிலத்தில் ஒரு சிலர் இறந்த உடலை கழுகுகளுக்கு உணவாக பயன்பட்டும் என்று மலையின் உச்சியில் சென்று போட்டுவிடுவார்கள்.

ஒருவர் இறந்தால் அந்த உடல் பல்வேறு விதமாக அவர்களின் பழக்கவழக்கத்திற்க்கு தகுந்தார்போல் உடல் போய் சேருகிறது. அதனை காட்டுவதற்க்கு பனிரெண்டாவது இடம் பயன்படும். சோதிட நூல்களில் தேடிப்பார்த்தால் இந்த தகவல்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன். தேடிப்பாருங்கள்.

நூல்களில் படிக்கும் படிப்பை விட நமது சொந்த அறிவை வைத்து சோதனை செய்யும்பொழுது சோதிடத்தில் ஏகாப்பட்ட தகவலை நாம் பெறலாம். அனுபவத்தில் நிறைய விசயங்களை சோதிடம் நமக்கு கற்றுக்கொடுக்கும். அப்படி கற்றதை வைத்து நீங்கள் புதிய நூல்களை சோதிடத்தில் படைக்கமுடியும்.

என்ன செய்வீர்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் பதிவுகளை வேறு வகையில் வாசிக்கிறேன் என்கிற வகையில் :

இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

நன்றி...