Followers

Thursday, March 6, 2014

நாடி



வணக்கம் நண்பர்களே!
                    நாடியைப்பற்றி சொன்னவுடன் ஒரு சில தாந்தீரிக முறையைபற்றி சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு மதத்திலும் மாந்தீரிகம் என்ற ஒரு விசயம் சொல்லப்படுகிறது. அது எந்தளவுக்கு உண்மை என்பது அவர்களின் நம்பிக்கையை பொறுத்த விசயம். ஒரு சில செய்திகளைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஊரில் ஒரு சிலருக்கு பேய் பிடித்துவிட்டது என்று சொல்லுவார்கள். இது இந்து மக்களின் ஏவலாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். இந்து மக்களுக்கு பேய் பிடித்தது என்றால் செய்தவன் இந்துவாக இருந்தால் அவர்கள் பேசும்பொழுது சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டு இருப்பார்கள். முன்னோர்களின் பெயரை உச்சரிப்பார்கள். அப்பொழுது பித்த நாடி வேலை செய்யும். நம்ம ஆட்கள் ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பான்.

வேறு மதங்களாக இருந்தால் உடல் நிலை சரியில்லை என்று படுத்துவிடுவார்கள். கொஞ்ச நாளில் கை கால் செயல் இழக்கும். அவர்களுக்கு வாத நாடி வேலை செய்யும்.வாதநாடி செயல் இழப்பது போல் தான் அவர்களின் வேலை இருக்கும்.

ஒரே அடியில் உயிர்போகும் என்றால் அது கேரளாகாரனின் வேலையாக இருக்கும். அவர்கள் ஜீவநாடியில் கை வைத்துவிடுவார்கள். எந்த ஒரு சத்தமும் இல்லாமல் பேசிக்கொண்டே இருக்கும்பொழுது உயிர் போகும். ஜீவநாடி தான் ஒருவரின் உயிர். அந்த நாடியை நிறுத்தினால் உயிர் உடனே போகும்.

என்னடா நாடியில் ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டார் என்று நினைக்கவேண்டாம். தெரிந்த விசயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொண்டேன். அதற்க்காக இவர் பேய் ஓட்டுபவர் என்று நினைத்துவிடாதீர்கள். எனக்கு அதனைப்பற்றி தெரியாது.

அடுத்த வாரம் இறுதியில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் இருக்கும் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். Cell 9551155800.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

A. Anitha said...

நாடி பற்றிய பதிவு அருமை. நாடி போல செய்வினை ஏவல் என்பவையும் சாத்தியம் தானா? அப்படி சாத்தியமெனில் ஏவல் மற்றும் செய்வினையை கண்டறிவது எப்படி?