வணக்கம் நண்பர்களே!
இன்றைய காலத்தில் உலகம் சுருங்கிவிட்டது என்று சொல்லுவார்கள். உலகம் சுருங்கியதோ இல்லையோ மக்களின் மனம் சுருங்கிவிட்டது. இன்றைய மக்கள் பணம் நிறைய சம்பாதிக்கிறார்கள் உறவுகளை சம்பாதிக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
பணத்தை சேமிப்பதற்க்காக உறவுகளை இழந்துவிட்டார்கள். உறவுகளை இழந்ததால் இவர்களுக்கு பிரச்சினை அதிகம் வருகிறது. எப்படி பிரச்சினை அதிகம் வருகிறது என்றால் இவர்களின் ஒரு பொதுகாரியத்திற்க்கு ஒரு ஆள் கூட வருவதில்லை.
சென்னையில் ஒரு சில திருமணத்தை நான் பார்த்து இருக்கிறேன். அந்த திருமணத்தின் பொழுது பத்து நபருக்கு குறைவாக ஆள் இருப்பார்கள். ஒரு கிராமத்தில் திருமணம் நடைபெற்றால் குறைந்தது பத்து கிராமத்தின் ஆட்கள் ஒரு இடத்தில் கூடுவார்கள்.
சென்னையில் நான் இருக்கும் பகுதியில் பெசன்ட்நகர் மின்மயானம் செல்லும் வழி இருக்கின்றது. ஒருவர் இறந்து சென்றாலே மூன்று நபருக்கு மேல் செல்லமாட்டார்கள். எதிர்காலத்தில் ஒருவர் இறப்பதாக இருந்தால் அவரே நேராக சுடுகாட்டிற்க்கு சென்று படுத்துக்கொள்ளவேண்டிய நிலை உருவாகலாம்.
கூட்டம் குறைந்தால் செலவு குறைவு தானே என்று நினைக்கதோன்றும். அப்படி இல்லை நீங்கள் வாழ்நாளில் செய்யவேண்டிய செலவு எந்த ரூபத்திலாவது வந்தே தீரும். அதற்கு செய்யவில்லை என்றால் மருத்துவசெலவு இப்படி ஏகாப்பட்டதை செய்ய வேண்டும்.
எங்களுக்கு நண்பர்கள் இருக்கின்றார்கள் பிறகு எதர்க்கு உறவினர்கள் என்று கேட்கதோன்றும். நண்பர்கள் எல்லாம் ஒரு எல்லை வரை தான் இருப்பார்கள். எத்தனை நாட்கள் உங்களோடு அவர்கள் இருப்பார்கள். அலுவலகம் செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். உறவுகள் அப்படி கிடையாது உங்களின் நல்லது மற்றும் கெட்டது என்று எது வந்தாலும் முன்னாடி நிற்பவர்கள். உறவினர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
இந்த காலத்தில் அண்ணன் தம்பிக்கு கூட பேசாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அட நீங்கள் தான் இப்படி வளர்ந்துவிட்டீர்கள் உங்களின் தலைமுறையாவது நன்றாக இருக்கட்டுமே
இந்த காலத்தில் அண்ணன் தம்பிக்கு கூட பேசாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அட நீங்கள் தான் இப்படி வளர்ந்துவிட்டீர்கள் உங்களின் தலைமுறையாவது நன்றாக இருக்கட்டுமே
இன்றைய காலகட்டத்தில் கோச்சாரசனியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதற்க்கு காரணம் இப்படி உறவுகளை நீங்கள் இழந்தது தான் காரணம். உங்களி்ன உறவுகளை கூப்பிட்டு அவர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்து கொடுத்தால் உங்களுக்கு சனியின் தாக்கம் குறையும்.
பணம் பணம் என்று செல்லாமல் உறவுகளும் வேண்டும் என்று நினைத்து உங்களின் உறவுகளை தேடிப்பிடித்து உங்களின் குலதெய்வ கோவிலில் ஒரு விருந்து ஒன்றை கொடுங்கள். உங்களின் வாழ்க்கை தரம் எப்படி உயர்கிறது என்று நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.
உங்களின் குலதெய்வத்தை வணங்கியது போலவும் இருக்கும் அதே நேரத்தில் உங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது போலவும் இருக்கும். என்ன நண்பர்களே உடனே விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
well said sir. But only very few are going to follow
Post a Comment