Followers

Sunday, March 9, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று ஒரு நண்பர் என்னிடம் பேசும்பொழுது அனைத்து சோதிடர்களும் அம்மனை வைத்துக்கொண்டு தான் பலனை சொல்லுகின்றனர் அவர்கள் அம்மனைப்பற்றி எழுதுவதில்லை ஆனால் நீங்கள் வெளியில் அம்மனை வைத்து தான் அனைத்தும் செய்கிறேன் என்று சொல்லுகிறீர்களே எதனால் என்று கேட்டார்.

ஒரு சோதிடர் அம்மனை வைத்து தான் செய்தாலும் அவர் அவர்கள் வைத்திருக்கும் அம்மனின் சக்தியை பொறுத்து தான் அவர்கள் வெளி வேலை செய்யும் திறமை இருக்கின்றது. அவர்கள் வெளியில் சொன்னால் அந்த அம்மனையே தன் பக்கம் இழுத்துவிடுவார்கள் என்று எண்ணி வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

என்னைப்பொருத்தவரை அனைத்தையும் முடிந்தளவுக்கு வெளியில் சொல்லுகிறேன். நான் எதற்கும் துணிந்து தான் இந்த தொழிலில் இறங்கினேன். வாழ்வு அல்லது சாவு என்று தான் இறங்கினேன். எத்தனையோ கொல்கத்தா மற்றும் கேரளாக்காரர்களிடம் சென்று வேலை செய்து இருக்கிறேன். இது வரை பாதிப்பு என்பது அதிகம் வரவில்லை என்று தான் சொல்லவேண்டும். அப்படியே வந்தாலும் அதனை சந்தோஷத்தோடு தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அம்மனின் சக்தி அப்படிப்பட்டது என்றபொழுது எங்கே வேண்டுமானாலும் நிற்கலாம். அம்மனின் சக்தி குறைவாக இருந்தால் நாம் காணாமல் போய்விடுவோம். எல்லாம் அம்மன் இருக்கின்றது என்ற தைரியத்தில் தான் செய்துக்கொண்டிருக்கிறேன்.


அம்மனைப்பற்றி வெளியில் சொல்லுவது தான் அம்மனுக்கு நான் கொடுக்கும் மரியாதை. நான் எந்தளவுக்கு சொல்லுகிறனோ அந்தளவுக்கு எனது வளர்ச்சி இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

A. Anitha said...

உண்மைதான் ஐயா! உண்மையான பக்தர்களை அம்மன் கைவிடுவதில்லை. அவர்களுடைய நியாயமான காரியங்களுக்கு பக்கபலமாக சாதாரண மனிதர்களுக்கே துணையாக நிற்கும் போது ஆன்மீகப் பெரியவர்களுக்கு. சொல்லவா வேண்டும்.