Followers

Saturday, August 24, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 12

வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். ராகு என்பது பாம்பு என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரிந்த ஒன்று. ராகு கெட்ட கிரகம் அதனால் கெட்டதை தான் தரும் பக்தியை தராது என்று நாம் நினைத்து கொண்டிருந்தால் அது தான் தவறு. இதனைப்பற்றி பதிவை தந்திருந்தாலும் இப்பதிவில் கூடுதல் தகவலை தருகிறேன்.

ராகு தசாவில் ஒரு சிலர் மிகப்பெரிய ஆன்மீகவாதியாக மாறிவிடுவார்கள் எப்படி என்றால் ராகு நல்ல நிலையில் அமரும்பொழுது அது நடைபெறும். பக்தி மார்க்கத்திற்க்கு அப்படியே கொஞ்சம் சென்று பார்த்தால் நமது மதத்தில் அனைத்தையும் பாம்பை வைத்து தான் சொல்லிருப்பார்கள். அனைத்து கடவுளும் பாம்பு மீது தான் இருக்கும்படி வைத்திருப்பார்கள். பாம்பு நமது மதத்தில் வணங்குதலுக்குரிய ஒன்று.

சிவனாக இருக்கட்டும் அம்மனாக இருக்கட்டும் பெருமாளாக இருக்கட்டும் சித்தர் வழிபாடாக இருக்கட்டும் அனைத்திலும் பாம்பை முன் நிறுத்துவார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது ஆன்மீகத்திற்க்கு பாம்பு தான் முக்கியமான ஒன்று என்று தெரிகிறது.  

ராகு தசாவில் அதிகமாக நீங்கள் காண்பது பாம்புவாக தான் இருக்கும்.அப்படி நேரில் காணமுடியவில்லை என்றாலும் கனவில் வந்து உங்களுக்கு காட்டும் நான் தான் உன்னை பிடித்து இருக்கிறேன். பய்ன்படுத்த முடிந்தால் பயன்படுத்திக்கொள் என்று சொல்லாமல் சொல்லும். ராகு என்பது சிறந்த ஆன்மீகத்தை தரும். 

உங்களின் ஜாதகத்தில் நல்ல நிலையில் ராகு இருந்து தசா நடைபெற்றால் ஆன்மீகத்திற்க்கு ஒரு சிறந்த காலமாக அது இருக்கும். உங்களுக்கு ராகு எங்கு உள்ளது என்று பாருங்கள். ராகு நல்ல நிலையில் இருக்கின்றாத என்று பாருங்கள். உங்களுக்கு அனைத்தும் சித்தியாகும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

KJ said...

Sir, ragu in mithunam, 6th place... He ll do favour ?

ATOMYOGI said...

வணக்கம் !
ராகு நல்ல நிலையில் இருக்கிறாரா இல்லையா என்பதை எப்படி அறிவது?

rajeshsubbu said...

வணக்கம் Sudhagar ஒரு கிரகம் அமையும் வீடு அதனை பார்க்கும் கிரங்களின் பலம் மற்றும் செல்லுகின்ற நட்சத்திரங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அறியவேண்டும்.
நன்றி