Followers

Sunday, August 18, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 6


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். இப்பதிவில் தொடர்ந்து ராகு தசாவின் பலன்களை பார்க்கலாம்.

ராகு எட்டாவது வீட்டில் நல்ல நிலையில் அமர்ந்து தசா நடைபெற்றால் முன்னோர்களின் உயில் வழியாக சொத்து கிடைக்கும். பிறரின் மரணம் வழியாக பணம் வருவதற்க்கு வாய்ப்பு உருவாகும். உங்களின் துணைவர் வழியாக தனவரவு கிடைக்கும். அரசாங்க உதவி கிடைக்கும். உங்களின் புத்திரர்கள் வெளிநாடு பயணம் செல்வார்.

ராகு எட்டாவது கெடுதல் தரும் நிலையில் இருந்து தசா நடைபெற்றால் துணைவர் திடீர் மரணம் ஏற்படும். அரசாங்க வழியாக தண்டனை வரும். முன்னோர்களின் சொத்து பிரச்சினை ஏற்பட்டு வழக்கு என்று கோர்ட்க்கு அலையவேண்டிவரும். குழந்தைகளால் பிரச்சினையை சந்திக்கவேண்டி வரும். விபத்து ஏற்படும். விபத்து ஏற்பட்டு உடனே மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவமானம் ஏற்படும்.

ராகு ஒன்பதாவது வீட்டில் நல்ல இருந்து தசா நடைபெற்றால் அரசாங்க வழியில் உதவி கிடைக்கும். தந்தை வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். உயர்கல்வி வெளிநாட்டில் கற்பதற்க்கு வாய்ப்பு உருவாகும். சமுதாயத்தில் நல்ல மதிப்பை உருவாக்கி தரும். உள்ளூரில் நடைபெறும் கோவில் விழாக்களில் உங்களை தலைமை தாங்க கூப்பிடுவார்கள்.

ராகு ஒன்பதாவது வீட்டில் கெடுதல் தரும் நிலையில் இருந்து தசா நடைபெற்றால் வெளிநாட்டு பயணத்தில் பிரச்சினை ஏற்பட்டு ஜெயிலில் தங்கும் நிலை ஏற்படும். சமுதாயத்தில் உங்களை யாரும் மதிக்கமாட்டார்கள். பெரியோர்களிடம் சண்டை சச்சரவு ஏற்படும். தந்தையாருக்கு கெடுதல் ஏற்படும். தந்தைக்கு மரணம் கூட ஏற்படலாம். அடிக்கடி அலையவைத்து வெறுப்பு ஏற்படவைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.







No comments: