Followers

Thursday, August 15, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 5


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவை பற்றி பார்த்து வருகிறோம். இந்த பதிவில் ராகுதசாவை தொடர்ச்சியாக பார்ப்போம்.

ராகு நல்லநிலையில் ஆறாவது வீட்டில் அமர்ந்து தசா நடைபெற்றால் விரோதிகள் மறைவார்கள். நீங்கள் திட்டம் போடுவதை எதிரிகள் கண்டு வியப்பார்கள். எதிரிகளிடம் உள்ள பணம் உங்களை தேடிவரும். வேலைக்காரர்கள் உங்களின் பேச்சை கேட்டு நடப்பார்கள். அவர்களின் மூலம் உங்களின் தொழில் வளர்ச்சி இருக்கும்.

ராகு ஆறாவது வீட்டில் கெடுதல் தரும் நிலையில் இருந்து தசா நடைபெற்றால் நோய் வரும். எதிரிகள் உங்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள். உங்களுக்கு எப்படா இந்த வியாதியிருந்து விடுதலை கிடைக்கும் என்று நினைக்க தோன்றும். கடன் வாங்கும் நிலை ஏற்படும். கடன்காரர்களால் உங்களின் மதிப்பை இழக்க வேண்டிவரும்.

ராகு நல்ல நிலையில் ஏழாவது வீட்டில் இருந்து தசா நடைபெற்றால் தீடிர் என்று திருமணம் நிச்சயம் செய்யப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய கூட்டுத்தொழில் ஏற்படும். உங்களின் தொழில் கூட்டாளி உங்களுக்கு விசுவாசமாக நடப்பார்.பயணங்களால் உங்களுக்கு வருமானம் வரும்.

ராகு ஏழாவது வீட்டில் கெடுதல் தரும் நிலையில் அமர்ந்து தசா நடைபெற்றால் உங்களின் துணைவர் திடீர் என்று இறந்துவிடுவார். கூட்டுத்தொழிலில் பிரச்சினை ஏற்படும்.கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்படும்.உங்களுக்கு திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஏழாவது வீட்டில் ராகு அமர்ந்து தசா நடைபெற்றால் உங்களுக்கு மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ராகுக்கு உள்ள பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: