Followers

Friday, August 9, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 3


வணக்கம் நண்பர்களே !
                    ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். இப்பதிவில் ராகு நான்காவது வீட்டில் இருந்து ராகு தசா நடைபெற்றால் என்ன பலனை தருவார் என்று பார்க்கலாம்.

நான்காவது வீட்டில் யோகம் தரும் நிலையில் ராகு இருந்தால் தாயின் வழியில் உங்களுக்கு செல்வம் சேரும். தாயின் உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். விவசாய நிலம் வைத்து தொழில்செய்பவர்களாக இருந்தால் எதிர்பாராத விளைசல் ஏற்பட்டு நல்ல வருவாய் தரும்.

நீங்கள் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தால் உங்களுக்கு பெரிய வாய்ப்பு வரும். பெரிய கம்பெனியோடு ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் மூலம் நல்ல வருமானம் உங்களின் கம்பெனிக்கு ஏற்படும். 

வெளியூர் பயணம் செய்வதால் உங்களுக்கு வருமானம் வரும். புதிய வாகனங்கள் வாங்கும் நிலை ஏற்படும். முறையான சுகத்தை அனுபவிக்கலாம். வெளிநாட்டு நபர்கள் உங்களை தேடி வருவார்கள்.

நான்காவது வீட்டில் இருந்து ராகு கெடுதல் தரும் நிலையில் இருந்து தசா நடைபெற்றால் தாயின் உடல்நிலை பாதிக்கப்படும். உங்களுக்கு விவசாயம் தொழிலாக இருந்தால் வயலில் விளையும் பொருளுக்கு நாசம் ஏற்படும். 

தாயின் தாயுக்கு பங்கம் ஏற்படும். அதாவது உங்களின் தாத்தா இறப்பார். உங்களின் வீட்டிற்க்குள் ஊர்வன வரும். உங்களின் வீட்டில் திருட்டு நடக்கும். இந்த ராகுவோடு வேறு கெடுதல் கிரகம் இருந்தால் திருட்டு நடக்கும்பொழுது உங்களை திருடர்கள் தாக்கக்கூடும்.வீட்டில் மாந்தீரிகத்தால் பிரச்சினை ஏற்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

KJ said...

Thanks sir. For magara lagna , Sani at tenth place in thulam, and tenth place owner sukran at 12th place with sani aspect. How sani dasa will be ? Pl explain.