Followers

Thursday, August 22, 2013

வேதங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    உலகில் பல மதங்கள் தோன்றினாலும் அவரவருடைய மதத்திற்க்கு அஸ்திவாரமாக விளங்குவது வேதம் .

வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
ஓதத்தரும் அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞரங வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே என்று திருமூலர் கூறுகிறார்.

அறிவை தரும் நூல் தான் வேதம். வித  நானே என்ற வேர்ச் சொல்லிருந்து எழுந்ததே வேதம் என்ற சொல்லாகும் வேதம் பல ஸீக்தங்களைக் கொண்டது. ஸீ என்றால் "நல்ல" என்று பொருள். உக்தம் என்றால் சொல்வது என்று பொருள்படும். நல்லனவற்றை எல்லாம் சொல்வது என்று அர்த்தம்.

க்ருதாயுகம் த்ரேதாயுகம் த்வாபரயுகம் ஆகிய மூன்று யுகங்களில் வாழ்ந்தவர்கள் பூரண ஆயுளுடனும் பலம் உள்ளவர்களாகவும் தபஸ்விகனாகவும் இருந்தனர். இவர்களின் தவமும் பலமடங்கு உயர்ந்து இருந்தது.  இவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி வேதத்திலிருந்து ரிக் யஜீர் சாம அதர்வண என்று பொறுக்கியெடுத்து அந்தந்த கர்மாவில் பயன்படுத்திக்கொண்டனர்.

1. ரிக் வேதம் "பிரஜ்ஞானம் பிரும்மம்" இதுவே ரிக் வேதத்தின் மகாவாக்கியம். இவ்வேதத்தில் 10 மண்டலங்களும் 10522 மந்திரங்களும் செய்யுள் வடிவமாக உள்ளது. இவ்வேத்தில் மொத்தம் 21 சாகைகள் உண்டு. இவ்வேதத்தை ஓதுபவர்களை ஹோதா என்கிறோம்.

2. யஜீர் வேதம் " அஹம்பிருமாஸ்மி" யஜீர் வேத  மகாவாக்கியம் இதில் 40 அத்தியாயம் உடையது. 1975 மந்திரங்கள் உள்ளது. இவ்வேதத்தில் மொத்தம் 1001 சாகைகள் உண்டு ஓதுபவர்களை "அதர்வாயு "என்கிறோம்

3. சாமவேதம் "தத்வமஸி" சாம வேத மகாவாக்கியம் இதில் 1875 மந்திரங்கள் உள்ளன. இவ்வேதத்தில் 1000 சாகைகள் உண்டு. ஒதுபவர்களை உத்காதா என்கிறோம்.

4, அதர்வண வேதம் "சுயம் ஆத்மா பிரம்மா" இவ்வேதத்தின் வேத மகா வாக்கியமாகும் இவ்வேதத்தில் 9 சாகைகள் மட்டுமே உள்ளன. அதுவும் வடநாட்டில் மட்டும் தான் உள்ளது.

அனைத்து வேதமும் தமிழ்வடிவத்தில் இப்பொழுது கடைகளில் கிடைக்கிறது. தமிழில் அதன் அர்த்தம் மட்டுமே உள்ளது. மந்திரங்கள் இல்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: