Followers

Friday, August 2, 2013

நல்ல யோசனை


வணக்கம் நண்பர்களே!
                                       பல இளைஞர்கள் என்னை பார்க்க வருகிறார்கள் வெளிநாட்டில் இருந்தும் வருகிறார்கள். அவர்கள் என்னை சந்தித்து பேசுகிறார்கள். அவர்களிடம் சொல்லும் சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

இவர்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்கிறார்கள் என்றால் அப்படியே மிகப்பெரிய ஒரு வீட்டை கிராமங்களில் கட்டுகிறார்கள். சொந்த ஊரில் ஒரு வீடு என்பது அவசியமான ஒன்று தான் அதற்க்காக சம்பாதித்த பணத்தை எல்லாம் அதிலேயே போடுவது நல்லதல்ல.உங்களுக்கு அருகில் இருக்கும் நகரங்களில் ஒரு மனையை வாங்கிபோடுங்கள் பிற்காலத்தில் அது உங்களுக்கு உதவும்.

நல்ல இடமாக எந்த ஒரு வில்லங்கமும் இல்லாமல் அதனை வாங்கிவிட்டால் குறைந்த காலத்திலேயே அதிகமான ஒரு முதலீடு போல் இருக்கும். அனைவரும் கிராமங்களில் இருந்து வெளிநாடு செல்லுவதால் உங்களுக்கு வழிகாட்டுவதற்க்கு ஆட்கள் இல்லை என்பதால் ஒரு பதிவின் வழியாக என்னால் முடிந்த உதவியை உங்களுக்கு சொல்லுகிறேன்.

என்னை சந்திக்கும் நபர்களின் பையன்கள் வெளிநாட்டில் மற்றும் இங்கு பெரிய கம்பெனியில் வேலை செய்தாலும் சிறிய கம்பெனியில் வேலை செய்தாலும் அவர்களிடம் சொல்லுவது வங்கியில் கடன் பெற்றாவது நிலத்தில் மேல் முதலீட்டு போடுங்கள் அப்பொழுது தான் அவனின் சம்பளம் ஒழுங்காக செல்லும் என்று சொல்லுவது வாடிக்கை. 

ஏன் என்றால் இளம்வயதில் கையில் பணம் நிறைய இருக்கும்பொழுது சம்பந்தமே இல்லாமல் செலவு செய்துக்கொண்டு இருப்பார்கள். வருகின்ற சம்பளம் கடன் கட்டவேண்டும் என்ற எண்ணம் வரும் பிற்காலத்தில் அவனுக்கு ஒரு நல்ல முதலீடு போல் இருக்கும் என்பதால் சொல்லுவேன்.இதனை படிக்கும் நீங்களும் இவ்வாறு செய்துவிடுங்கள். ஏன் என்றால் இன்று இருக்கும் கம்பெனிகள் நாளை இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு.அப்பொழுது கவலைபடாமல் இருக்கலாம்.

நீங்கள் சோதிடராக இருந்தால் இவ்வாறு சொல்லிவிடுங்கள். சோதிடர்களுக்கு சமுதாயத்தின் மீது அதிக பொறுப்பு இருக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: