Followers

Thursday, August 29, 2013

சோதிடர்களே


வணக்கம் நண்பர்களே!
                     நீங்கள் அனைவரும் சோதிடர்கள் தான் ஏன் என்றால் இரும்பு பிடித்த கை சும்மா இருக்காது அதேபோல் நீங்கள் சோதிடத்தின் மீது சிறிய ஈர்ப்பு வந்துவிட்டாலே உங்களுக்கு அப்புறம் அது என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்று நினைத்து பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

சோதிடத்தை தொழிலாக செய்யவில்லை எனது மனதிருப்த்திக்காக படிக்கிறேன் என்று சொல்லுபவர்கள் கூட பிறர்க்கு ஏதாவது ஒரு கட்டத்தில் சோதிடத்தை பார்க்க நேரிடும். அது இலவசமாக கூட பார்க்கலாம். எப்பொழுது ஒரு மனிதன் அடுத்த சோதிடத்தை கையில் எடுக்கிறானோ அப்பொழுதே அவனுக்கு பிறரின் கர்மா வந்துவிடும். கர்மாவை பார்ப்பதற்க்கு தானே சோதிடம். அது இலவசமாக பார்த்தாலும் காசுக்கு பார்த்தாலும் கர்மாவின் தாக்குதல் உங்களுக்கும் ஏற்படும்.

கர்மாவின் தாக்குதலில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள உங்களுக்கு தெரியவேண்டும். அப்பொழுது மட்டுமே உங்களுக்கு பிறரின் கர்மா தாக்காமல் நீங்கள் தப்பிக்கமுடியும். நீங்கள் சோதிடம் பாருங்கள் ஆனால் தகுந்த ஏற்பாட்டை செய்துக்கொள்ளுங்கள். உங்களை காத்துக்கொள்ள வேண்டும். உங்களை காத்துக்கொண்டால் தான் பிறரை காப்பாற்றமுடியும்.

நீங்கள் பரிந்துரைக்கும் கோவில்கள் நீங்கள் அங்கு சென்று அந்த கோவிலின் சக்தியை பார்த்துவிட்டு பிறர்க்கு பரிந்துரைக்க வேண்டும். உங்களுக்கு அந்த கோவிலில் நல்ல சக்தி இருக்கும்பொழுது பிறர்க்கு நீங்கள் சொன்னால் அவர்களுக்கு எளிதில் அந்த சக்தி கிடைக்கும் என்பதால் இவ்வாறு சொன்னேன். நான் பரிந்துரைக்கும் கோவில்கள் எல்லாவற்றிக்கும் நான் அந்த கோவிலுக்கு சென்று அந்த சக்தி எனக்கு காட்டிக்கொடுத்ததால் பிறர்க்கு பரிந்துரைக்கிறேன். 

நீங்கள் சென்று வராத கோவிலை ஒரு நாளும் பரிந்துரைக்காதீர்கள். நீங்கள் அங்கு சென்று வந்தால் தான் உண்மை என்ன என்று உங்களுக்கு தெரியும். புத்தகத்தில் போட்டுள்ளார்கள் அதனால் சொன்னேன் என்று சொல்லிவிடவேண்டாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: