Followers

Sunday, August 11, 2013

குலதெய்வமும் நமது செயலும்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில வீடுகளில் குலதெய்வம் நன்றாக இருந்தாலும் வீட்டில் இருப்பவர்களின் நிலை அந்தளவுக்கு முன்னேற்ற்ம் ஏற்படவில்லை என இப்பொழுது எனக்கு தெரியவந்துள்ளது. அதற்கு காரணம் என்ன என்று பார்க்கலாம்.

உங்களின் வீட்டில் குலதெய்வத்தின் அருள் கிடைத்தாலும் நீங்கள் ஒரு அடியாவது உங்களின் முன்னேற்றத்திற்க்கு அடி எடுத்து வைக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே நீங்கள் வெற்றி அடையமுடியும். குலதெய்வத்தின் அருள் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு சும்மா இருந்தால் ஒன்றும் நடைபெறாது.

குலதெய்வம் பல வாய்ப்புகளை பெற்று தரும் ஆனால் அந்த வாய்ப்பை நீங்கள் தட்டிவிட்டுக் கொண்டு இருக்ககூடாது. குலதெய்வத்தின் வழியாக வரும் வாய்ப்பை நீங்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அதே நேரத்தில் உங்களின் முயற்சி இருக்கவேண்டும். பல பேர் வீட்டில் சும்மா இருந்துக்கொண்டு நேரத்தை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பல வீடுகளில் சும்மா பக்தி மட்டும் பேசிக்கொண்டு காலத்தை கழிப்பதும் தெரிகிறது. பக்தி எல்லாம் இருக்கவேண்டியது தான் தவறு ஒன்றும் இல்லை ஆனால் வேலை செய்யும் நேரத்தில் நீங்கள் கண்டிப்பாக வேலை செய்யவேண்டும்.

நான் பலவீடுகளில் குலதெய்வத்தின் அருளை பெற்று தந்திருக்கிறேன். அவர்களில் ஒரு சிலருக்கு பக்தி அதிகமாகவதற்க்கு காரணம் என்ன என்று பார்ததால் குலதெயவத்தை எடுத்து வந்தவுடன் இவர்களுக்கு ஒரே வேலை அதற்கு பூஜை செய்துக்கொண்டு இருப்பது மட்டுமே இப்படியே இருந்தால் குலதெய்வம் என்ன செய்யும் இவனுக்கு பக்தி மட்டும் தான் குறிக்கோள் என்று எண்ணி பக்தி மார்க்கத்திற்க்கு இழுத்து சென்றுவிடும்.

குலதெய்வத்தின் அருளை பெறவேண்டும் என்பது உண்மை தான் ஆனால் அதனை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் நமது வாழ்வின் வெற்றி இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: