Followers

Friday, August 23, 2013

கண் திருஷ்டி பகுதி 2


வணக்கம் நண்பர்களே!

                    கண்திருஷ்டியைப்பற்றி நேற்று பார்த்தோம் அல்லவா. தொடர்ந்து இந்தபதிவிலும் பார்க்கலாம்.

ஒருவருக்கு கண்திருஷ்டி ஏற்பட்டு இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது ?

அடிக்கடி கொட்டாவி விடுவார். தேவையற்ற மனச்சலனம் ஏற்படும். திடீர் என்று கீழே விழுவார். உடல்நிலை கோளாறு ஏற்படும். நன்றாக இருக்கும் கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும். இதுமாதிரியான அறிகுறி தென்பட்டால் உங்களுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.

பரிகாரம் என்ன?

முதலில் உங்களை சுத்தி போடவேண்டும். எலுமிச்சைபழத்தை வைத்து வீட்டில் உள்ள பெரியவர்களை கொண்டு உங்களுக்கு சுத்தி போடச்சொல்லுங்கள்.  வாரத்திற்க்கு ஒருமுறையாவது இப்படி சுத்தி போடுவது நல்லது. அது முடியவில்லை என்றால் அமாவாசை அன்றாவது சுத்தி போடச்சொல்லுங்கள்.

மாலை நேரத்தில் நெருப்பை ஒரு தட்டில் எடுத்து மிளகாய்,கடுகு மற்றும் உப்பை எடுத்து நெருப்பில் போட்டு அதனை முச்சந்தியில் கொட்டலாம். இதுவும் கண்திருஷ்டி போக்கும் நல்ல பரிகாரம். 

அமாவாசை நாட்களாக இருந்தால் பூசணிக்காயை வைத்து சுத்தி போடலாம். நல்ல பலன் ஏற்படும். கண்திருஷ்டி நன்றாக ஏற்பட்டு இருக்கிறதை சுத்தி போடும்போதே சுத்தி போடுபவர்களுக்கு தெரியும்.

வீட்டிற்க்கு மற்றும் வியாபார ஸ்தலங்களுக்கு திருஷ்டி வராமல் தடுப்பதற்க்கு இப்பொழுது பல கடைகளில் திருஷ்டி நீக்கும் பொருட்கள் கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கிவந்து கட்டிக்கொள்ளலாம். இப்பொழுது காளிக்கோவில்களில் கயிறு தருவது தேங்காய் தருவது எல்லாம் நடக்கிறது. அதனை எல்லாம் வாங்கிக்கட்டிக்கொள்ளலாம்.

இதனை எல்லாம் விட எளிய வழி செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில்  அல்லது உங்களின் குலதெய்வத்திற்க்கு என்று உரிய நாளில் உங்களின் வீட்டில் உங்களின் குலதெய்வத்திற்க்கு என்று மாலை நேரங்களில் நல்ல சாம்பிராணி போட்டு வீடு முழுவதும் காண்பித்தாலே போதும் வீட்டிற்க்கு எந்த கண்அடியும் மற்றும் தீயசக்திகளும் வராது.

தொடரும்..

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Anonymous said...

சுற்றிய எலுமிச்சைப் பழத்தை என்ன செய்வது ?
திருஷ்டி சுற்றுபவர் தனக்கு முதலில் இட வலமா
அல்லது வல இடமாக சுற்ற வேண்டுமா ?
நல்ல பதிவுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
நன்றி !

rajeshsubbu said...

வணக்கம் சுற்றிய எலுமிச்சை பழத்தை உடைக்க வேண்டும். எலுமிச்சை பழத்தை சுற்றுபவர்களின் நிலையை பொருத்து அது அமையும். ஏன் என்றால் ஒரு சிலர் மாந்தீரிகத்தை வைத்து சுற்றுபவர்களாக இருந்தால் அனைத்தும் எதிர்மறையாக சுற்றுபவர்களாக இருப்பார்கள். நீங்கள் எல்லாம் வலது இடமாகவே சுற்றலாம். நன்றி