Followers

Tuesday, August 20, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 7


வணக்கம் நண்பர்களே!
                    பத்தாவது வீட்டில் ராகு நல்ல நிலையில் அமர்ந்து தசா நடைபெற்றால் உங்களின் தொழிலில் நீங்கள் அதிகமான வெற்றி பெறுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு செய்கின்ற வேலையில் பதவி உயர்வு வரும். உங்களின் தந்தைக்கு பணவரவுகள் கிடைக்கும். உங்களின் துணைவருக்கு வீடு கட்டி தருவீர்கள். உங்கள் செய்கின்ற வேலையில் பதவி உயர்வு வரும்.

நல்ல சுகவாழ்க்கை ஏற்பட்டு அதன் வழியாக உங்களுக்கு நிம்மதி ஏற்படும். குழந்தை பாக்கியம் இருக்கும். புதிய பதவி என்று வரவேண்டும் அல்லவா. தந்தை என்ற பதவி கிடைக்கும் என்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொன்னேன்.பொதுவாக ராகு பத்தாவது வீட்டில் அமரும்பொழுது வெளிநாடுகளில் மற்றும் கணிப்பொறி துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவார்.

மத சம்பந்தமான விசயங்கள் மற்றும் கோவில் பணி என்று ஆன்மீகமார்க்கத்தையும் ராகு பத்தாவது வீட்டில் இருந்து தசா நடைபெறும் பொழுது ஏற்படுத்துவார்.

வேலை மற்றும் தொழில் வழியாக உங்களுக்க துணைவரை ஏற்படுத்திக்கொடுப்பார். உங்களின் துணைவர் உங்களோடு இருப்பவரையே திருமணம் செய்ய ராகு வைப்பார்.

பத்தாவது வீட்டில் ராகு கெடுதல் தரும் நிலையில் இருந்து தசா நடைபெற்றால் பதவி பறிபோகும். உங்களின் தாய் தந்தையருக்கு கர்மம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உங்களின் மதிப்பு குறையும். வேலையும் இல்லாமல் உங்களின் தந்தையின் காசில் நீங்கள் நிற்கவேண்டி வரும். தந்தையார் சேர்த்த வைத்த பணத்தை எடுத்து செலவு செய்து காலத்தை ஒட்ட வேண்டிவரும். 

உங்களின் மனைவிக்கும் உங்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு இருவருக்கும் பஞ்சாயத்து வைக்கும் நிலை ஏற்படலாம். உங்களின் மதிப்பு குறையும் என்பதால் வேலை இல்லை எனும்பொழுது உங்களுக்கு பிரச்சினை தானே. உங்களுக்கு வருமானம் இல்லை என்றால் உங்களுக்கு அனைத்தும் பிரச்சினை.

வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை ஏற்படும். பொதுவாக பெண்கள் வழியில் பிரச்சினை தோன்றும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

தமிழ்செல்வன் said...

Hello Sir... First i thank U For Ur post..
Now a days, santhiran thasa ans sevvayi puththi is running for me... after 3 months ragu puththi starts..
(i have Methuna Lagnam, santhiran in Thanusu , sevvayi and ragu in Meenam )
after completing my degree still i not get job for 2 years...
will i expect good job after 3 months...
Please Reply....

rajeshsubbu said...

வணக்கம் நண்பரே கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

Paddy said...

Hello Sir, Thanks for your post.
For me Rahu Dasa and Kethu Bhukthi is running now. It goes till 28/04/2014.
As of now Ketu in 4th house in (Mesha Rasi) and Raghu in 10th house in Libra along with Saturn. Let me know by when I will get back to job?