Followers

Monday, August 5, 2013

பெண்களின் குலதெய்வ வழிபாடு


வணக்கம் நண்பர்களே!
                     சனிக்கிழமை அன்று என்னை சந்திக்க ஒரு அம்மா வந்திருந்தார். அந்த அம்மாவிற்க்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே இருக்கிறது. 

எனக்கு பிறகு யாரும் என் குடும்பத்தில் கிடையாது. என் பெண்ணிற்க்கு திருமணம் செய்துவிட்டால் அவ்வளவு தான் நாங்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்க்கொள்ளனுமா என்று கேட்டார். அவரின் கேள்வி எனக்கு மேல் யாரும் கிடையாது குலதெய்வத்தை ஏன் எடுக்கவேண்டும் என்பது போல் தான் இது. 

நமக்கு பின் யாரும் இல்லை என்று நினைக்ககூடாது. நாம் வாழும் வாழ்க்கையில் எந்தவித பிரச்சினையும் வராமல் இருக்கவேண்டும். நமது குழந்தைக்கு அமையும் வாழ்க்கை அதாவது பெண்ணிற்க்கு அமையும் வாழ்க்கையும் நன்றாக அமையவேண்டும் என்பதால் நாம் குலதெய்வ வழிபாட்டை மேற்க்கொள்ள வேண்டும்.

ஒரு வீட்டில் பெண் குழந்தை மட்டும் தான் இருக்கிறது என்றால் தாராளமாக குலதெய்வ வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள். ஒரு பெண்ணிற்க்கு இரண்டு குலதெய்வம் எப்பொழுதும் காவலாக இருக்கும். பிறந்த வீட்டு குலதெய்வம் மற்றும் புகுந்த வீட்டு குலதெய்வம் இரணடு சக்திகளும் அவர்களுக்கு காவலாக இருக்கும்.

குலதெய்வ பூஜையில் கூட என்ன செய்வார்கள் என்றால் பொங்கல் வைப்பதற்க்கு பிறந்த வீட்டு பெண் தான் முதலில் பொங்கல் வைக்க வேண்டும் என்று சொல்லி அவர்களுக்கு முதலிடம் கொடுப்பார்கள். எங்களின் கோவிலில் அதாவது நமது அம்மனின் கோவிலில் பிறந்த பெண்ணிற்க்கு மட்டும் பொங்கல் வைக்கும் உரிமை இருக்கிறது. அதாவது ஆண்டுக்கு ஒரு பூஜை நடைபெறும் அல்லவா அதற்கு அப்படி அவர்களுக்கு உரிமை உண்டு.

உங்களுக்கு பெண் குழந்தை மட்டும் பிறந்திருக்கிறது அதனால் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டியதில்லை என்று நினைக்கவேண்டாம் நீங்கள் கண்டிப்பாக குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு பெண் புகுந்த வீடு செல்லும்பொழுது அந்த வீட்டை சமாளிக்கும் திறமையை தருவது குலதெய்வத்தின் அருள் மட்டுமே. புகுந்த வீட்டில் எப்படி வேண்டுமானாலும் பிரச்சினை வரலாம் அந்த பிரச்சினை எல்லாம் நம்முடைய பெண் மட்டும் எதிர்கொள்ள வேண்டும். அப்படி அந்த பெண் எதிர்கொள்ள உங்களின் குலதெய்வத்தின் அருள் தேவை என்பதை மனதில் கொண்டு குலதெய்வ வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: