Followers

Wednesday, August 28, 2013

தசாநாதன் பகுதி 14


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு தசாவும் புத்திகளால் பிரிக்கப்பட்டு அந்த புத்திக்கு தகுந்தார்போல் தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று பார்க்கிறோம்.

அந்த தசாநாதன் புத்திநாதன் நிலை கொண்டு நாம் பலனை சொல்லிக்கொண்டு வருகிறோம்.  தசாநாதனைக்கொண்டு புத்திநாதர்களின் காலத்தை வைத்து பலன் சொல்லுகிறோம்.இதனை தவிர வேறு ஒரு முறையும் இருக்கின்றது.

ஒவ்வொரு புத்தியும் எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதற்கு எடுத்துக்காட்டாக ராகு தசா பதினெட்டு வருடங்கள். பதினெட்டு வருடங்களை ஒவ்வொரு வீட்டிற்க்கும் சமமாக பிரித்துக்கொடுக்க வேண்டும். பதினெட்டு வருடங்கள் சமமாக ஒவ்வொரு வீட்டிற்க்கு பிரித்து கொடுத்தால் ஒரு வீட்டிற்க்கு ஒன்றரை வருடங்கள் வரும்.

நீங்கள் ராகு நின்ற வீட்டியிருந்து பலனை ஒன்றரை வருடங்களாக வைத்து பலனை சொல்லிக்கொண்டு வரவேண்டும்.அப்படி சொன்னாலும் ஒரு சிலருக்கு பலன் சரியாக வருகின்றது.

ராகு லக்கினத்தில் நின்றால் ராகு தசா சுய புத்தி ஒன்றரை வருடங்கள் என்று வைத்து சொல்லவேண்டும். பிறகு ராகு தசா அடுத்த புத்தி இரண்டாவது வீடு என்று வைத்து பலனை சொல்லவேண்டும். இப்படி ஒவ்வொரு வீடாக ஒன்றரை வருடங்கள் சொன்னாலும் பதினெட்டு வருடங்களின் ராகு தசா பலன் சரியாக வருகின்றது.

ராகு தசாவைப்போல் அனைத்து கிரகங்களின் தசாவையும் வைத்து நீங்கள் பலன் சொல்லமுடியும். எளிதான முறை தான் அனைவரும் முயற்சி செய்துப்பாருங்கள்.

நண்பர்களே Facebook யிலும் தங்களை ஜாதககதம்பத்தோடு இணைத்துக்கொள்ளுங்கள். அதிலும் கருத்துக்கள் வெளிவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Anonymous said...


இந்த முறையில் ஒன்பது கிரஹங்களின் புத்திகளுக்கு ஒன்பது வீடுகள் சரியாக வரும்.
மீதமுள்ள மூன்று வீடுகளுக்கு எப்படி பலன் சொல்வது ?

நான் இதனையே வேறுவிதமாகவும் சொல்வதுண்டு.
ஒரு தசையை பன்னிரெண்டாக வகுத்த பின் அந்த கிரகம் நின்ற வீட்டை
முதலாவதாக எண்ணி அது எத்தனையாவது தசையோ அதற்குரிய பலன்
அந்த வீட்டிற்கு நடைபெறும் என்று.


உதாரணம் : ஒருவருக்கு ஆறாமாதி தசை ஏழாவது வீட்டில் நடை பெற்றால் [ பன்னிரெண்டாக வகுத்த வீடுகளில் ]
கணவருக்குக் கடன் பிரச்னை என்று சொல்லலாம்.

rajeshsubbu said...

வணக்கம் ஸ்ரவாணி தங்களின் கருத்துக்கு நன்றி. கிரகங்கள் என்று இல்லாமல் வீட்டை வைத்துக்கூட நாம் பலனை சொல்லவேண்டியது தான். ஒன்பது கிரகத்திற்க்கு மேல் செல்லும்பொழுது பத்தாவது வீடு கர்ம வீடு என்று சொல்லவேண்டியது. நன்றி