Followers

Sunday, February 16, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 21


ணக்கம் ண்பர்களே!
                    பிரச்சினையும் தீர்வும் எழுதி நீண்ட நாள்கள் சென்றுவிட்டது. பல வேலைகளில் இருந்ததால் இதனை விட்டுவிட்டேன். இனி தொடர்ந்து பார்க்கலாம். 

பொதுவாக ஜாதகம் எப்படி கெட்டுருந்தாலும் நமக்கு கொஞ்சம் அறிவு இருந்தால் எப்படியும் அந்த பாதிப்பில் இருந்து ஒரளவு தப்பிவிடலாம். அந்த அறிவாவது வருவதற்க்கு நமக்கு கடவுளின் அனுக்கிரகம் வேண்டும். அது நமது தாய் தந்தையர்கள் மற்றும் முன்னோர்களின் புண்ணியம் இருக்கவேண்டும்.

ஒரு கருத்தை பார்க்கிறேன். நமக்கு ஐந்தாவது வீடு கெடுகிறது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது என்ன நடக்கும் நமக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. குழந்தை பாக்கியம் இருந்தாலும் அந்த குழந்தை பெயர் சொல்லும் அளவுக்கு வராது. அப்பொழுது என்ன செய்யலாம் நமக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம்.

தத்து எடுத்து வளர்க்க நமக்கு மனசு வரவேண்டும். அப்படி மனசு வந்தால் அந்த குழந்தை உங்களின் குழந்தையாக தான் இருக்கும். உங்களுக்கும் குழந்தை என்று ஒரு வாரிசு வந்துவிடும். கடவுள் மறுத்தார் தனது புத்திசாலிதனத்தால் இப்படி எடுத்துக்கொள்ளலாம். மனிதன் என்ன அவ்வளவு எளிதில் எதையும் ஏற்றுக்கொள்வானா ?

எதையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டான். கிரகத்தின் பாதிப்பின் தாக்குதலில் இருந்து அவன் மீளமாட்டான். குழந்தையே இல்லை என்பதற்க்கு பதில் ஒரு வாரிசு இருக்கின்றதே என்று சொல்லிவிட்டு இருக்கலாம். பொதுவாக ஜாதகத்தில் தோஷம் இருப்பவர்கள் எந்த அறிவுரையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது புதிய விதி.

நமக்கு தேவைப்பட்டது போல் இப்படி தான் மாற்றிக்கொள்ளமுடியும். வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் கலை இது. யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. இன்னும் பல விசயங்கள் இதில் இருக்கின்றது வரும் பதிவில் சொல்லுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: