நேற்று ஒரு நண்பர் என்னை சந்திக்க வந்தார் அவர் என்னிடம் எனது ஜாதகத்தை பார்த்துவிட்டு இந்த ஜாதகம் இப்படி தான் வாழமுடியும் என்று நீங்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். இந்த ஜாதகத்தை தாண்டி நான் வாழவேண்டும் என்று நினைக்கிறேன் அதற்குள்ள வழியைப்பற்றி சொல்லுங்கள். முதலில் நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள் என்றார்.
அவரின் ஜாதகத்தில் சந்திரனும் சனியும் சேர்ந்து இருந்தது அதனால் அவர் எந்த ஒரு வேலை எடுத்தாலும் ஒழுங்காக முடிப்பதில்லை. இரண்டரை நாள்களுக்கு ஒரு முறை சந்திரன் ராசி மாறுவது போல் அவரின் மனமும் மாறிக்கொண்டு உள்ளது. அதற்கு பரிகாரம் கிரிவலம் மற்றும் வளர்பிறையில் சந்திரனை தனிமையில் ரசிப்பது.கடலை தனிமையில் ரசியுங்கள். மனது அமைதிப்படும். அதன் பிறகு பூஜைகளை பற்றி சொல்லி தருகிறேன் என்றேன்.
முதல் முதலாக ஒரு நபர் ஜாதகத்தை மீறி செயல்படவேண்டும் என்ற வருகிறார் என்று சொல்லும்பொழுது அவரை பார்த்து நான் பெருமைப்பட்டேன். கடவுளைப்பற்றி நன்றாக புரிந்துக்கொண்டிருக்கிறார். கடவுள் இருக்கும்பொழுது கிரகங்கள் என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறார் அதற்கே அவருக்கு வாழ்த்துச்சொல்லவேண்டும்.
வாழ்க்கையில் எப்பேர்பட்ட தடை வந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை ஜாதகத்தில் உள்ள கிரகங்களை தாண்டி வேலை செய்ய ஆரம்பிக்கும். நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கையாக இருக்ககூடாது அது கடவுளின் நம்பிக்கையாக இருக்கவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Dear sir
Thanks for showing the power of believe.
Why not this believe not applicable for previous topic the lady jadagam.
Thanks
Antony
பாஸ், ஜோதிடத்தில் வாகன ஓட்டிகளை குறிப்பவர் செவ்வாயா,சனியா? நண்பர் செவ்வாய் ,யூநிஃபார்ம் போட்ட ட்ரைவர் என்று சொல்கிறார். உங்கள் விளக்கம் please.
Post a Comment