Followers

Sunday, February 2, 2014

தொட்டு பழகுதல்


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைய உலகம் நாகரீக உலகம் என்று சொல்லிக்கொண்டு மனிதர்கள் நிறைய தவறு செய்கின்றனர். அப்படி ஒரு தவறைப்பற்றி இப்பதிவில் பார்க்கபோகிறோம்.

ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமம் என்று சொல்லிக்கொண்டு ஆண்களும் பெண்களும் சகஜமாக பழகஆரம்பித்துவிட்டனர் அதில் தவறு இல்லை ஆனால் ஒருவரை ஒருவர் தொட்டு பழககூடாது. ஆண்களும் ஆண்களும் கூட இப்படி தொட்டு பழககூடாது. என்ன செய்வது காலத்தின் கோலம் மாறிவிட்டது. 

ஒருவரின் உடலை நாம் தொட்டால் அவரிடம் இருக்கும் கெட்ட எண்ணங்களும் நம்மை தாக்கும் இதனை ஆராய்ச்சி எல்லாம் செய்யகூடாது நம்பி தான் ஆகவேண்டும்.

மனதின் வழியாக தம்மை தாக்குவதை விட அவர்களின் உடலில் இருந்து தாக்குவது எளிதில் நம்மை வந்து அடையும். நம்மோடு பழகும் மனிதர்கள் நம்மிடம் வெளிவேஷம் போட்டுக்கொண்டு பழகலாம் ஆனால் உள்மனதில் தவறான எண்ணங்கள் இருக்கலாம். அப்படி அவர்கள் எதிர்போடு நம்மை தொடும்பொழுது அது நமது உடலை தொட்டு நமது ஆத்மாவையும் காயப்படுத்தும்.

பேருந்தில் பயணம் செய்யும்பொழுது கூட்டமாக தான் இருக்கும் ஆனாலும் அவர்களுக்கும் நமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருக்கும். அவர்களின் எண்ணங்கள் நம்மீது கிடையாது. அந்தளவுக்கு நம்மை தாக்காது. நம்மோடு பழகுபவர்களின் எண்ணங்கள் என்ன் என்று சொல்லமுடியாது அல்லவா. பொதுவாக உங்களின் மீது அடுத்தவர்கள் தொட்ட பேசுவதை தவிர்க்க பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

CHITRA said...

I agree with you sir. My husband used to say this often. But as you said, now the culture is changed and even for the birthday & Wedding day , others especially the gents, gives hands to me, i used to hesitate, but , no other way , we have to

rajeshsubbu said...

வணக்கம் தொட்டு பேசுதல் கூடாது தான் என்ன செய்வது காலத்தின் கோலம் அப்படி மாறிவிட்டது.