வணக்கம் நண்பர்களே!
குரு தசாவில் உள்ள புத்திகள் எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டோம். அதில் சில உதாரணசோதிடத்தை வைத்தும் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
பொதுவாக குரு தசா நடைபெற்றால் அந்த குரு எப்படி பாழ்பட்டு தசா நடந்தாலும் உங்களை வெளிஉலகத்திற்க்கு காட்டாமல் விடமாட்டார். உங்களைப்பற்றி நாலுபேருக்காவது தெரிய வைத்துவிடுவார். என்ன தான் நாம் சம்பாதித்தாலும் ஊரில் நாலு பேருக்கு இவர் யார் என்று தெரியவேண்டும் அல்லவா.
சும்மா வீட்டுக்குள்ளே அடைப்பட்டு இருந்துக்கொண்டிருப்பார்கள் அவருக்கு குரு தசா ஆரம்பித்தால் அந்த நபர் வெளியில் வர ஆரம்பித்துவிடுவார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கமாட்டார்கள்.
வெளியில் செல்லும்பொழுது பொதுநலம் மனதிற்க்குள் வந்துவிடும். ஊரே சாமி கும்பிடாமல் இருக்கின்றனர் இவர்களை முதலில் திருத்தவேண்டும் என்பார்கள். அங்க பாரு அந்த கோவிலை அசுத்தமாக வைத்திருக்கிறார்கள். முதலில் அந்த கோவிலை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்பார்கள்.
ஊரில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்களாக இருக்கின்றனர் நீதி நியாயம் இல்லாமல் இருக்கின்றனர். முதலில் இவர்களுக்கு தெய்வபக்தி பொதுநலனைப்பற்றி சொல்லவேண்டும் என்பார்கள்.
தெருவில் சென்றுக்கொண்டிருக்கும்பொழுது அங்கு புதிதாக வீடு கட்டிக்கொண்டிருந்தால் அங்க பாரு வாஸ்து சரியில்லை அப்படி வீடு கட்டுகிறார் அவரிடம் போய் இது சரியில்லை இப்படி மாற்றி கட்டுங்கள் என்பார்கள்.
என்னோடு ஒரு நண்பர் இருந்தார் அவருக்கு குரு தசா நடைபெற்றுக்கொண்டிருக்கும்பொழுது அவர் சும்மாவாகவே சண்டைக்கே சென்றுவிடுவார் அவரிடம் நான் சொல்லுவேன் சும்மா இருடா உன்னோடு பெரிய தொல்லையாக போய்விட்டது என்று சொல்லுவேன்.
என்னோடு ஒரு நண்பர் இருந்தார் அவருக்கு குரு தசா நடைபெற்றுக்கொண்டிருக்கும்பொழுது அவர் சும்மாவாகவே சண்டைக்கே சென்றுவிடுவார் அவரிடம் நான் சொல்லுவேன் சும்மா இருடா உன்னோடு பெரிய தொல்லையாக போய்விட்டது என்று சொல்லுவேன்.
பொதுவாக இவர்களை எல்லாம் கடவுள் தூண்டிவிடுகிறார் என்றே அர்த்தம். தன் உலக்த்தை சரிசெய்ய கடவுள் இப்படிப்பட்ட தசாவை நடத்திக்கொடுக்கிறார் என்று தான் அர்த்தம். கலியுகத்தில் மனிதர்கள் தான் கடவுள் என்பார்கள். கடவுள் மனிதர்களை வைத்து ஆடும் ஆட்டம் தான் இது எல்லாம். குரு தசா நடந்தால் நான் சொன்னது அப்படியே உங்களுக்கு நடந்திருக்கும். என்ன சரியா நண்பர்களே
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
நீங்கள் குரு தசா நடந்தால் ஒருவர் எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்று சொன்னீர்கள்... ஆனால் நான்சிறு வயதில் இருந்தே எப்பொழுதும் அப்படிதான் இருக்கின்றேன்..(என்வயது தற்போது 31) என் லக்கினத்தில் குரு இருக்கின்றார்... ஒருவேளை அதுதான் காரணமாக இருக்குமோ... ஏனென்றால் என்னிடம் பழகுகின்றவர்கள் என்னை ஒரு வித்தியாசமாகவே பார்கின்றார்கள்.... இது எனக்கு அன்னியமாக படுகின்றது...
ஒரு வேளை அப்படியும் இருக்கலாம் நண்பரே
Post a Comment