Followers

Sunday, February 9, 2014

சுற்றும் உலகம்



வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பரிடம் எனக்கு தெரிந்த நண்பருக்கு வேலை வேண்டும் என்று ஒரு வருடத்திற்க்கு முன் வேலை கேட்டு அவரின் அலுவலகத்திற்க்கு சென்றேன். அந்த கம்பெனியில் அவர் மேலாளராக இருந்தார். அவரிடம் எனது நண்பருக்காக சிபாரிசுக்கு சென்றேன்.

சென்னையில் அவர் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதால் எனது நண்பரை அவரின் வழியாக அந்த கம்பெனிக்குள் கொண்டு சென்றுவிட்டால் அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துவிடும் என்று எண்ணி சென்றேன்.

எந்த ஒரு மனிதனுக்கும் பதவி வந்துவிட்டால் அவனை கையில் பிடிக்கமுடியாது என்பதை அவனிடம் சென்றபிறகு தான் கற்றுக்கொண்டேன். வேலைக்கு சென்றவன் நல்ல மார்க் எடுக்கவில்லை. ஏதோ தேர்ச்சி பெற்று இருக்கிறான் அவ்வளவு தான்.

இவனின் சான்றிதழ் எல்லாம் பார்த்துவிட்டு ராஜேஷ் இவர் நல்ல மார்க் எடுக்கவில்லை. கடினம் என்றார். நான் நீங்கள் தானே மேலாளர் நீங்கள் நினைத்தால் இவனை வேலைக்கு எடுக்கலாம் என்றேன். எப்பொழுதுமே படித்தவனிடம் ஒரு பழக்கம் இருக்கும் அது என்ன என்றால் அவனை தவிர அனைவரும் முட்டாள் என்று நினைப்பான். 

இல்லை ராஜேஷ் அலுவலகம் என்பது ஒரு சிஸ்டம் இருக்கிறது. அந்த சிஸ்டத்தை மீறி எதனையும் செய்துவிடமுடியாது. விதியை மீறி நாங்கள் எதுவும் செய்துவிடமுடியாது என்றான். சரி இவனிடம் இனி நின்றால் அடித்து விரட்டிவிடுவான் என்று வருகிறேன் என்று வந்துவிட்டேன். 

நண்பருக்கு வேறு அலுவலகத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்துக்கொடுத்தவிட்டேன். அந்த நிகழ்ச்சியை பற்றி நான் மறந்தே போய்விட்டேன்.

கடந்த வாரம் அந்த மேலாளர் நண்பர் என்னை தேடி  வந்தார். வந்தவர் ராஜேஷ் எப்படி இருக்கின்றாய். உன்னை பார்க்கவேண்டும் என்று ஒரு மாதம் நினைத்துக்கொண்டே இருந்தேன். இன்று அலுவலகத்தில் வேலை முடிந்தவுடன் உன்னை பார்க்கவந்துவிட்டேன்.

வா சாப்பிடலாம் என்றான். நான் வேலை இருக்கின்றது வந்த விசயத்தை சொல்லு என்றேன். நீ கூட ஒரு பையனை அழைத்துக்கொண்டு வந்தாய் அல்லவா அவனுக்கு நம்ம அலுவலகத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்துவிடலாம். அடுத்த மாதம் இண்டர்வியூ வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம் என்றான்.

நான் வேலை கேட்டது ஒரு வருடத்திற்க்கு முன்பு இப்பொழுது வந்து வேலைக்கு ஆளை எடுக்கிறாயா என்றேன். வேலைக்கு போகாமல் இருந்தால் வரசொல்லலாம் என்றான். அவனுக்கு அப்பொழுதே வேலை கிடைத்துவிட்டது என்றேன். அவன் உன்னிடம் கொஞ்சம் தனியாக பேசவேண்டும் என்றேன். சொல்லு என்றேன். 

எனக்கும் எனது மனைவிக்கும் கொஞ்சம் பிரச்சினை அதனால் கொஞ்சம் ஜாதகத்தை பார்த்துவிட்டு ஏதாவது பரிகாரம் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றான். பரிகாரம் செய்து எல்லாம் பிரச்சினையை முடிவுக்கொண்டு வரமுடியாதே என்றேன். நீ மனசு வைத்தால் செய்து தரமுடியும் என்றான்.

1500 சதுரஅடியில் ஒரு அலுவலகத்தை வைத்துக்கொண்டு சிஸ்டம் விதி இருக்கின்றபொழுது பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்களுக்கு சிஸ்டம் இருக்காதா விதி இருக்காதா இப்படி தான் செய்யவேண்டும் என்று சுற்றிக்கொண்டு இருக்கும்பொழுது அதனை மீறி எப்படி செய்யமுடியும் என்றேன்.அவனுக்கு அப்பொழுது தான் அவன் செய்த செயல் தெரிந்தது. அதனை நினைத்துக்கொண்டு நீ பேசாதே அப்பொழுது எனது நிலை அப்படி என்றான். அவனுக்கு உலகம் என்றால் என்ன என்று புரியவைத்து அவனுக்கு செய்துக்கொடுத்தேன். இப்பொழுது ஒழுங்காக இருக்கிறான். அடுத்தவர்களையும் மதிக்கிறான்.

உலகம் சுற்றிக்கொண்டே இருக்கின்றது இன்று நாம் வெயிட் காட்டினால் அடுத்த வரும் சுற்றில் நம்மை தூக்கிபோட்டு மிதிக்கவும் செய்யும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: