Followers

Tuesday, February 4, 2014

நல்லதை நினையுங்கள் நல்லதே நடக்கும்


ணக்கம் ண்பர்களே!
                    நமது நண்பர்கள் என்னோடு பேசினால் மனதிற்க்கு புதிய தெம்பு கிடைக்கிறது என்று பேசுவார்கள். என்னோடு பேசும்பொழுது உங்களுக்கு தெம்பு கிடைக்கிறது என்றால் தாராளமாக என்னோடு பேசுங்கள். நான் ஒன்றும் உஙகளை தவறு என்று சொல்லமாட்டேன். வாரத்திற்க்கு ஒரு முறை என்று ஒரு சில நண்பர்கள் என்னோடு பேசுவார்கள்.

என்னோடு பேசும்பொழுது இவர்களுக்கு தெம்பு எதனால் கிடைக்கிறது என்று சிந்தனை செய்து பார்த்தேன். ஒன்று அம்மனின் அருள் கிடைக்கும் அடுத்தது என்னோடு மனதில் எந்தவித எதிர்மறையான எண்ணங்களும் இருக்காது. அதே நேரத்தில் எதாவது தோன்றினால் அதனை உடனே சொல்லிவிடுவேன்.

மனதில் எப்பொழுதும் நல்ல எண்ணங்களை மட்டுமே வைத்துக்கொள்ளவேண்டும். நான் இதுவரை என்ன என்ன நினைத்தேனோ அது எல்லாம் இன்று வரை நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. சிறு வயதில் நான் என்ன சிந்தனை செய்தோனே அது கூட இப்பொழுது எனது கைக்கு வருகின்றது. நமது எண்ணங்களுக்கு தகுந்த மாதிரியே நமது வாழ்க்கையும் அமைகின்றது.

ஒரு சில வீடுகளில் தன் குழந்தையை தங்கள் பெற்றோர்களே நீ உருப்பிடமாட்டாய் என்று திட்டுவார்கள். அப்படி எல்லாம் உங்களின் குழந்தையை திட்டாதீர்கள். உங்களின் வாக்கு மெய்யாகிவிடும். நன்றாக வருவாய் என்று வாழ்த்துங்கள். நல்லவர்களாக அவர்கள் வருவார்கள்.

இதுவரை எதிர்மறையாக நினைத்துக்கொண்டிருந்தாலும் இனிமேல் நல்ல எண்ணங்களை மனதில் உருவாக்குங்கள். அப்பொழுது உங்களுக்கு உங்களின் எண்ணங்களை உங்களை உருவாக்கிவிடும்.


 என்ன இன்று முதல் செய்கின்றீர்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: