Followers

Sunday, February 2, 2014

அம்மா என்ற அன்பு


ணக்கம் ண்பர்களே!
                       உங்களைப்பெற்ற தாயைப்பற்றி ஒன்றை சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். அன்று ஒரு நண்பருக்கு சொன்ன அறிவுரையை உங்களுக்கு சொல்லுகிறேன். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வேலை தேடி நகரத்திற்க்கு வருகின்றனர். அவர்களுக்கு ஒரு வேலை கிடைத்தாலும் அவர்கள் என்ன செய்கின்றனர் என்றால் நமது அம்மா நீண்ட காலம் இருப்பார்கள் அவர்களுக்கு செய்யவேண்டியது எல்லாம் பிறகு செய்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடுகின்றனர்.

ஒரு சிலருக்கு வேலை கிடைக்காமலும் இருக்கின்றனர். அவர்களால் உண்மையில் செய்யமுடியவில்லை. அது யாராக இருந்தாலும் சரி நகரத்திற்க்கு என்று வேலை தேடி வந்துவிட்டால் உங்களின் கையில் கிடைக்கும் ஒரு சிறிய தொகையாவது உங்களின் தாயிற்க்கு கொடுங்கள் அல்லது ஒரு சிறிய தொகையில் உள்ள ஒரு புடவையை அம்மாவிற்க்கு என்று வாங்கிக்கொடுங்கள்.

இதனை நீங்கள் செய்யும்பொழுது அவர்கள் மறுத்தாலும் அவர்களின் இதயம் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அவர்களின் மனது தனது மகன் அல்லது மகள் உழைப்பால் எடுத்து கொடுத்ததை பல பேர்களிடம் காட்டி மகிழ்வு கொள்வார்கள். வாழ்க்கையில் நாம் செய்யும் இந்த சின்ன விசயம் நிறைந்த மகிழ்ச்சியை கொடுக்கும்.

தனது அம்மாவிற்க்கு இன்னமும் காலம் இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இருந்தால் வாழ்க்கையில் முடிவு என்பது எப்பொழுது வேண்டுமானாலும் நடைபெறலாம். அம்மா இல்லாமல் போய்விட்டால் அப்புறம் நாம் எத்தனை கோடி சம்பாதித்தாலும் அந்த வாழ்க்கை என்பது வீண். கோடி பணம் இருக்கும் நான் முன்னூறு ரூபாய் செலவு செய்து புடவை வாங்கிக்கொடுக்க தாய் இருக்காது.

காலத்தை தள்ளிபோடாமல் அனைவரும் செய்துவிடுவது நல்லது. நீங்கள் வேலை தேடும் இளைஞர்களாக இருந்தாலும் கூட பரவாயில்லை. நீங்கள் ஒரு உணவு விடுதியில் வேலை செய்தாவது அந்த பணத்தை முதலில் எடுக்க பாருங்கள். உங்களின் உழைப்பில் எடுத்ததாக அது இருக்கட்டும். உங்களை பெற்றது உண்மை அதனால் உங்களின் உண்மை உழைப்பில் இருந்து எடுத்தால் அது நன்றாக இருக்கும். இதுவரை யாரும் செய்யாமல் இருந்தால் உடனே செய்துவிடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: