வணக்கம் நண்பர்களே!
ஞாயிற்றுகிழமை அன்று ஒரு சினிமா தயாரிப்பாளர் என்னை சந்தித்து பேசிவிட்டு அவரின் அலுவலகத்திற்க்கு என்னை அழைத்துக்கொண்டு சென்று இருந்தார். ஞாயிற்றுகிழமை அன்றும் அவரின் அலுவலகத்தில் பல பேர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர் என்னிடம் ஆன்மீக உதவியை எதிர்பார்த்து அவரின் அலுவலகத்திற்க்கு அழைத்துக்கொண்டு சென்றார். அந்த தயாரிப்பளார் என்னிடம் இந்த தொழிலிலும் பல பேர்கள் வேலை செய்கின்றனர்.
அதனால் நீங்கள் இந்த தொழிலுக்கும் உதவவேண்டும் என்று சொன்னார். பல பேர்களுக்கு வாழ்வளிக்கும் ஒரு தொழிலுக்கும் நாம் உதவினால் தான் என்ன என்று என்மனதிடம் கேட்டுவிட்டு அவரிடம் உங்களின் தொழில் எந்த ஒரு தடையும் இல்லாமல் செல்லும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
நேற்று அலுவலகத்திற்க்கு வந்தவுடன் பதிவை எழுதிவிட்டு நண்பர் தமிழ்செல்வனுக்கு போன் செய்தேன். அவரிடம் இன்று சினிமாவிற்க்கு செல்லலாமா என்று கேட்டேன். அவர் என்ன படம் என்று கேட்டார். ஒவ்வொரு படமாக பெயரை சொன்னவுடன் நான் பார்த்துவிட்டேன் என்றார். நீங்கள் அனைத்து படத்தையும் பார்த்துவிட்டீர்கள் எனக்காக ஒரு படத்தை பாருங்கள் என்றேன். சரி என்று சொன்னார் இரண்டு மணிக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு பதிவை எழுதிமுடித்துவிட்டு உட்கார்ந்துக்கொண்டு இருந்தேன்.
நண்பர் இரண்டு மணியளவில் வந்தார். இருவரும் ராயப்பேட்டை சென்றோம். அங்கு ஒரு ஹோட்டலில் மதியஉணவை சாப்பிட்டோம். ராயப்பேட்டை எஸ்ப்பிரஸ் அவென்யுக்கு சென்றோம். வீரம் படத்திற்க்கு டிக்கெட் வாங்கினோம். செலவு எல்லாம் நான் செய்யலாம் என்றால் நண்பர் நான் செய்கிறேன் என்று செய்கிறார். நான் படத்திற்க்கு உங்களை கூப்பிட்டால் நீங்கள் செலவு செய்கிறீர்களே என்றேன். பரவாயில்லை என்றார். பெரிய மாலில் 100 பேர் கூடதேறமாட்டார்கள். கரண்ட் பில் கட்டுவதற்க்கு கூட தேறாது. படம் முடிந்தபிறகு தான் தெரிந்தது அங்கு பார்க்கிங் என்ற பெயரில் தனியே ஒரு சினிமா டிக்கெட் எடுக்கும் அளவுக்கு பணம் வாங்குகிறார்கள்.
படத்தை பற்றி எல்லாம் நான் சொல்லவில்லை. அதனை எழுதுவதற்க்கு பல நண்பர்கள் இருக்கின்றனர். சொல்ல வந்த ஆன்மீகத்தை சொல்லுகிறேன் விவேகானந்தர் சொல்லுவார் பகவத்கீதை படிப்பதை விட கால்பந்து விளையாடுவது மேல் என்பார். மகிழ்ச்சி தரும் விசயம் எதுவோ அதனை செய்யுங்கள். எனக்கு மகிழ்ச்சி எல்லாம் சினிமா பார்ப்பது இல்லை. எப்பொழுதாவது பார்ப்பது உண்டு. அந்த தொழில் உள்ளவர்களும் என்னை சந்திக்கும்பொழுது அதனைப்பற்றி கொஞ்சம் தெரியவேண்டும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
வணக்கம்....
தாங்கள் முந்தைய பதிவில் கூறியது (ஆறாம் வீட்டு அதிபதி 1 ஆம் வீட்டில் இருந்தால் சதா வியாதிகளும் நோய் நொடிகளும் இருக்கும் தைரியமில்லாதவராகவும் எதிரிகளால் தொல்லை இருந்துகொண்டே இருக்கும்.)... ஆனால் ஸ்ரீராமரின் ஜாதகத்தில் ஆறாம் அதிபதி குரு லக்கினத்தில் உட்சம் பெற்று இருக்கிறார்... ஆனால் அவர் நல்ல தைரியத்தோடு இருந்தது மட்டும் அல்ல மிக பலசாலியான ஈஸ்வரன் பட்டம் பெற்ற எதிரியான ராவணனை அழித்தது பெரும் வெற்றி கொண்டாரே..... இது என்ன முரண்பாடு எனக்கு தயவு செய்து விளக்க முடியுமா அன்பரே......
வணக்கம் நண்பரே ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு மாதிரியான பலனை தரும். இராமரும் உடனே சென்று சண்டைப்போட்டுக்கொண்டு சீதையை மீட்டு வரவில்லை. அவர் பலமாக இருந்தால் உடனே எல்லாவற்றையும் செய்திருக்கமுடியும் அல்லவா. அவரும் தயார்படுத்திக்கொண்டு தான் சென்றார். இராமன் என்பனை ஹூரோவாக பார்க்கிறோம். அவரின் அடுத்தபக்கத்தில் எப்படி பயந்தார் என்று யாருக்கு தெரியும்.
Post a Comment