Followers

Wednesday, February 5, 2014

குரு தசா பலன்கள் பகுதி 86


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பார்த்து வந்தோம். இதில் ஒரு உதாரண ஜாதகத்தை பார்க்கலாம்.

கன்னி லக்கினம். லக்கினாதிபதியான புதன் பத்தாவது வீட்டில் சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் கிரகம் சனியோடு சேர்ந்து அமர்ந்திருக்கிறது. பத்தாவது வீட்டில் சனி அமர்ந்ததால் பெரிய அளவில் ஒரு தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறார். சனியோடு லக்கினாதிபதியும் சேர்ந்ததால் பிரச்சினை ஏதுவும் இல்லை. தொழில் நன்றாக சென்றுக்கொண்டிருந்தது.

இவருக்கு குரு தசா ஆரம்பித்தவுடன் பிரச்சினை ஏற்பட்டது. அந்த பிரச்சினை எதனால் ஏற்பட்டது என்றால் இவர் நடத்தும் தொழிற்சாலையில் வேலையாட்கள் அமைவதில்லை. வேலையாட்களால் பிரச்சினை ஏற்பட்டதால் இவரின் தொழில் நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்த பிரச்சினை ஏற்பட்டு ஒன்றை வருடங்களுக்கு மேல் சென்ற பிறகு தான் என்னை சந்தித்தார்.

அந்த நேரத்தில் அவரின் ஜாதகத்தில் குரு தசா குரு புத்தி நடைபெற்றுக்கொண்டிருந்தது. குரு கிரகம் ஆறாவது வீட்டில் இருந்து தசா நடைபெற்றது. வேலையாட்கள் பிரச்சினை அதனால் தான் ஏற்பட்டது. அவரிடம் அடுத்து வரும் சனி புத்திகளில் உங்களுக்கு பிரச்சினை ஏற்படாது.தொடர்ந்து உங்களுக்கு நன்றாக செல்லும் என்று சொன்னேன். 

பரிகாரம் செய்யவேண்டுமா என்று கேட்டார். அவரிடம் பரிகாரம் என்பது எல்லாம் செய்யவேண்டியதில்லை நிலைமை அதுவாகவே சரியாவிடும் என்றேன்.சொன்னது போலவே சனி புத்தி ஆரம்பித்த நேரத்தில் இருந்து நன்றாக சென்றுக்கொண்டிருக்கிறது.

குரு கிரகம் ஆறில் நின்றாலும் சுயபுத்தியை மட்டும் தான் பிரச்சினை அதிகம் கொடுக்கும் அதன் பிறகு வரும் புததிகள் எல்லாம் நல்லதை செய்வதை நான் பல பேர்களின் ஜாதகத்தில் பார்த்து இருக்கிறேன். இந்த ஜாதகத்தில் குரு கிரகம் சொந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கின்றது.

ஆறில் குரு இருந்து தசா நடத்துவதால் அவ்வப்பொழுது உடல்நிலையில் பிரச்சினை மட்டும் கொடுத்துக்கொண்டிருக்கிறது வேற எந்த பிரச்சினையும் இல்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: