வணக்கம் நண்பர்களே!
ஒரு நண்பர் ஏழை மக்கள் என்று குறிப்பிடுகிறீர்களே தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் நன்றாக இருக்கின்றார்கள். பிச்சைக்காரர்களின் வருமானமே 1000 ரூபாய் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். நீங்கள் சொல்லும் ஏழை யார் என்று கேட்டார்.
தமிழ்நாட்டில் ஏழை மக்கள் இல்லை என்றால் ஏன் அரிசி எல்லாம் இலவசமாக கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சென்னையில் பார்த்தால் வசதியான சொகுசான பஸ் வசதி இருந்தாலும் ஒயிட் போர்ட் பஸ்ஸில் தான் அதிகமான கூட்டம் ஏறுகிறது.ஒருவருக்கு அனைத்து வசதியும் இருந்தால் ஏன் ஒயிட் போர்ட் பஸ்ஸில் மக்கள் ஏறப்போகிறார்கள்.

ஏழை என்று சொன்னால் அவன் சாப்பாட்டுக்கு மட்டும் ஏங்குகிறான் என்று நாம் பார்க்ககூடாது. ஒரு மனிதனுக்கு அடிப்படை வசதி எல்லாம் கிடைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடைபெறுகிறது என்று அரசியல்வாதிகள் எல்லாம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டில் எத்தனையோ கிராமமக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். பல கிராமங்களுக்கு நான் செல்லும்பொழுது நேராகவே பார்த்து இருக்கிறேன். அரசியல்வாதிகள் சொல்லும் பொற்கால ஆட்சியாக இருந்தால் அது இப்படி தான் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை.
பல இளைஞர்கள் நமது பதிவை படித்துவிட்டு என்னை வந்து சந்தித்து பேசுவார்கள். அவர்கள் பேசும்பொழுது சார் வெளியூரில் இருந்து வந்திருக்கிறேன் எனக்கு வேலை கிடைக்கமாட்டேன்கிறது எனது ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லுவார்கள். அவர்களிடம் பணம் என்பதே இருக்காது. அவர்களுக்கு தேவையானவற்றை ஜாதக ரீதியாக சொல்லிவிட்டு அவர்களுக்கு பணம் கூட கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறேன். அவர்கள் அன்றைய நாளில் ஒரு ஏழைகளாக தான் இருக்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருத்தரும் ஏழைகளாக தான் இருக்கின்றனர். அந்த இடத்தில் நாம் உதவி செய்தால் போதும். ஏழைகளைப்பற்றி பல உதாரணத்தை காட்டமுடியும்.அது பதிவு நீண்டுக்கொண்டே போகும்.
என்னிடம் ஏழைகள் என்றைக்கும் வந்து இந்த தோஷம் இருக்கிறது என்று கேட்கமாட்டார்கள். எனக்கும் எனது மனைவிக்கும் பிரச்சினை என்று கேட்கமாட்டார்கள். அவர்கள் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லுவார்கள்.அவர்கள் உடல்நிலையை சரிசெய்துவிட்டுவிடுவேன்.
எனது குரு என்னிடம் சொல்லுவார் நம்மை படைத்தனின் நோக்கம் ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்க்கு மட்டுமே என்பார். அதனை செய்வது மட்டுமே எனது முதல் பணி.
நண்பரே இந்தியாவில் உள்ள எத்தனையோ காட்டுக்குள் தனியாக இருந்திருக்கிறேன். எந்த மிருகத்திற்க்கும் நான் பயந்தது கிடையாது ஆனால் நான் பயப்படுவது மனிதரைப்பார்த்து தான். ஒரு மனிதன் அவ்வளவு மோசமானவன்.
நண்பரே இந்தியாவில் உள்ள எத்தனையோ காட்டுக்குள் தனியாக இருந்திருக்கிறேன். எந்த மிருகத்திற்க்கும் நான் பயந்தது கிடையாது ஆனால் நான் பயப்படுவது மனிதரைப்பார்த்து தான். ஒரு மனிதன் அவ்வளவு மோசமானவன்.
சோதனை ஏன் செய்கிறேன் என்றால் பிரபஞ்ச விதி என்று ஒன்று இருக்கிறது ஒரு தவறான மனிதனுக்கு செய்யும் உதவி அவனின் கர்மா முழுவதும் நம்மிடம் சேரும்.
மனிதர்களை சோதனை செய்யாமல் எந்த ஒரு ஆன்மீகவாதியும் செய்கிறேன் என்று இறங்கினால் அவன் போலி ஆன்மீகவாதி என்று அர்த்தம். மனிதர்கள் சொல்லுவார்கள் எங்களின் கர்மாவை உங்களின் வழியில் தானே தீர்க்கமுடியும் என்று கேட்பார்கள். இவன் எதனை வேண்டுமானாலும் செய்துவிட்டு வருவான் நாம் தீர்க்கவேண்டும் என்று நினைப்பான்.
நான் என்னிடம் வரும் நபர்களிடம் கேட்கும் கேள்வி இதுவரை எந்த ஆன்மீகவாதியும் சந்தித்தது கிடையாதா என்று தான் அந்த கேள்வி இருக்கும். நீங்கள் உடனே என்னிடம் வரவேண்டும் என்பது கிடையாது. அனைத்து ஆன்மீகவாதியும் பார்த்துவிட்டு முடியவில்லை என்றால் வாருங்கள் என்று தான் சொல்லுவேன்.
இந்தியா முழுவதும் ஆன்மீகவாதிகளாக நிரம்பி வழிகிறது. தெருவுக்கு பத்து ஆன்மீகவாதிகள் சோதிடர்கள் இருக்கின்றனர். இவர்களிடம் சென்றுவிட்டு முடியவில்லை என்றால் என்னிடம் வாருங்கள். நேற்று ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். இழக்காமல் எதனையும் பெறமுடியாது என்று சொன்னார் உண்மை தான். ஒன்றை பெறவேண்டும் என்றால் ஒன்றை நீங்கள் கண்டிப்பாக இழக்கவேண்டிவரும். இது தான் சோதிடவிதியும் கூட.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment