Followers

Friday, February 14, 2014

கர்மா


ணக்கம் ண்பர்களே!
                    உங்களுக்கு நன்றாக தெரியும் அனைத்தும் கர்மாவால் தான் நடைபெறுகிறது. அப்படி கர்மாவால் நடைபெறும்பொழுது அதனை தீர்ப்பதற்க்கு ஆன்மீகவாதிகள் தங்களின் பங்களிப்பை செய்கிறார்கள். ஒரு சோதிடராக இருந்தாலும் பிறரின் கர்மாவை பார்க்கும்பொழுது அவர்களின் கர்மா அந்த சோதிடர்களை கண்டிப்பாக தாக்கும்.

எந்த ஒரு தொழிலையும் விட சோதிடதொழில் என்பது ஒரு மோசமான தொழில் தான். இந்த தொழில் செய்வது பிறரின் கர்மாவை வாங்குவதற்க்கு சமம். இதில் ஒரு படி மேலே போய் உங்களின் பிரச்சினை தருகிறேன் என்று சொன்னால் அது மிகப்பெரிய கர்மாவாகும். உங்களுக்கு வரும் பிரச்சினை அனைத்தும் கர்மாவால் நடைபெறும்பொழுது அதனை தடுக்கும் முயற்சியில் இறங்கினால் அந்த கர்மாவின் தாக்குதல் எப்படி இருக்கும்.

ஒரு செயல் வெற்றி பெறுவதற்க்கு காரணம் உங்களின் கர்மாவை எடுக்கும்பொழுது தான் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். எடுத்த கர்மாவை நாங்கள் வாங்கி அதனை அழிக்கும் வேலையில் இறங்கி செய்யவேண்டும். உங்களிடம் வாங்கும் கர்மா ஒரு அளவை தாண்டவிடகூடாது. தாண்டிவிட்டால் நாங்கள் படுக்கையை போடவேண்டியது தான். 

என்னிடம் குரு சொல்லுவார் அனைத்து வேலையையும் இழுத்துபோட்டு செய்யாதே. உனக்கு தான் பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்பார். அதற்கு காரணம் நான் சந்நியாசி கிடையாது. 

அவர் சொல்லுவார் உன்னிடம் இருந்து ஒருத்தர் சென்றால் அதனைப்பற்றி கவலைப்படாதே அது இறைவனின் செயல். அவரை வெளியில் விட்டு அடிக்க இறைவனே உன்னிடம் இருந்து பிரிக்கிறார் அவர்களை விட்டுவிடு என்பார்.உண்மையும் அது தான். என்னை விட்டு செல்பவர்களை பற்றி நான் ஒருநாளும் கவலைப்படுவதில்லை. ஒரு வாய்ப்பை தருவேன் அதனைப்பயன்படுத்தி வந்தால் செய்வேன். அப்படி வரவில்லை என்றால் எந்த கவலையும் படுவதில்லை. பொதுவாக ஆன்மீகத்தில் இருப்பவர்கள் கவலைப்படமாட்டார்கள். 

அவர்களின் கர்மா அவர்களை பிரிக்கிறது. நாம் என்ன செய்யமுடியும் என்று விட்டுவிடுவார்கள். இப்பொழுது உள்ள ஆன்மீகவாதிகள் ரொம்பசுத்தம். போனால் போங்கடா என்று இருப்பார்கள். ஏன் என்றால் நீ இல்லை என்றால் அடுத்தவன் என்ற கணக்கு. நீங்களும் இந்த ஆன்மீகவாதி இல்லை என்றால் அடுத்த எத்தனையோ ஆன்மீகவாதி என்று இருப்பீர்கள். உங்களின் பிரச்சினை மட்டும் தீரவே தீராது.

எனக்கு இப்பொழுது இப்படிபட்ட மனநிலை உருவாகிவருகிறது. அம்மனிடம் மக்கள் வேண்டுதல் வைத்து நடத்திக்கொடுக்கட்டும். நாம் சும்மா சோதிடத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கலாம். மாதம் ஒரு வேலை அல்லது ஆறு மாதத்திற்க்கு ஒரு வேலை மட்டும் செய்யலாம் என்று ஒரு மனநிலை வருகிறது. என் மனதில்பட்டதை அப்படியே வெளியில் சொல்லுவேன். அதுபோல் தான் இந்த நிகழ்வும். எனது கர்மா என்னை தடுக்கிறது என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: