Followers

Thursday, February 13, 2014

குரு தசா பலன்கள் பகுதி 88



ணக்கம் ண்பர்களே!
                    நிறைய நண்பர்களே ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்னடா பதிவை காணோம் ஆளையையும் காணோம். நிறைய அலுவலகம் வந்தாலும் ஒரு சில விசயங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் முடிந்துவிடும். எப்படி இருந்தாலும் இந்த மாதம் 100 பதிவாது தந்துவிடுகிறேன்.

குரு தசாவைப்பற்றி பார்த்து வந்தோம். ஒருவருக்கு மகர லக்கினமாக அமைந்து அவருக்கு ஆறில் குரு வக்கிரம் பெற்று நின்றது. அவருக்கு ராகு தசா நடைபெற்றபொழுது அவருக்கு நன்றாக அந்த தசா அமையவில்லை. அவர் என்னிடம் வந்து எனக்கு குரு தசாவாது நன்றாக அமையுமா என்று கேட்டார். 

அவரிடம் கண்டிப்பாக உங்களுக்கு குரு தசா நன்றாக அமையும் என்று சொன்னேன். அவர் பயந்தற்க்கு காரணம் ஆறாவது வீட்டில் குரு கிரகம் அமர்ந்த காரணத்தால் பிரச்சினை ஏற்படுமோ என்று பயந்தார். ஒரு சுபகிரகம் ஆறாவது வீட்டில் வக்கிரம் அமைந்து தசா நடத்தும்பொழுது அவர்களுக்கு நல்ல பலனை தருவதை நான் பலபேருக்கு பார்த்திருக்கிறேன்.

ஆறாவது வீட்டில் அமைந்த குரு வக்கிரம் பெற்றதால் அது நல்ல பலனை தருகிறது. இப்பொழுது அவர் நன்றாக இருக்கிறார். குரு கிரகம் சுபகிரகம் இருப்பதால் அது வக்கிரம் அடைந்து ஆறாவது வீட்டில் அமர்ந்தவுடன் அதன் சுபதன்மையை இழந்து தீயகிரகங்கள் போல் அமைந்துவிடுகிறது. ஆறாவது வீடு ஒரு மறைவு ஸ்தானம் என்பதால் வக்கிரம் பெற்ற குரு அமைந்தவுடன் நல்ல பலனை தருகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

CHITRA said...

for thula lagna,Mithuna rasi,in 6th position sani is there? Is it good or bad ? As per my knowledge , it poorva puniya pavam know?