கேள்வி
ஸ்ரவாணி
நீங்கள் வேறு எந்த தெய்வங்களுக்கு உரிய மந்திரம் தந்திரம்
சொல்லா விட்டாலும் தயவு செய்து கண்டிப்பாக அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திர தந்திர [உரிய மூலிகை இவை எல்லாம் சித்தர் முறை போன்று ] முறையினைக் கூறவும்.
சொல்லா விட்டாலும் தயவு செய்து கண்டிப்பாக அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திர தந்திர [உரிய மூலிகை இவை எல்லாம் சித்தர் முறை போன்று ] முறையினைக் கூறவும்.
பதில்
வணக்கம் என்னை பொருத்தவரை அனைத்தையும் வெளிபடையாக சொல்லவேண்டும் என்று நினைப்பவன் ஆனால் என்ன செய்வது குருவின் பேச்சை மீறி ஒன்றும் செய்யமுடியாது. குரு என்னை கட்டுபடுத்தவில்லை அவர் என்ன சொன்னாரோ அதனை மீறி செய்யும்பொழுது எனக்கு வரும் தீமைகளை நானே எதிர்த்து நின்று போராடவேண்டும்.
உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கும்பொழுது என்னை தேடி ஒருவர் கொடுத்தால் அந்த நபரின் வார்த்தைக்கு மதிப்பு தரவேண்டும். அவர் அவர் ஆன்மீகத்தில் அப்படி இருக்கிறேன் இப்படி இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது சும்மா ஊரை சுற்றிக்கொண்டு இருப்பவனுக்கு ஒன்று கிடைக்கும்பொழுது அதனை பத்திரமாக காப்பாற்றவேண்டும் என்பது எனது கடமை.
அங்காளபரமேஸ்வரி அம்மனின் மந்திரங்கள் எல்லா இடத்திலும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதனை எடுத்து பின்பு ஒரு நாளில் தருகிறேன். நீங்கள் கேட்கும்பொழுதே தெரிகிறது உங்களின் தந்திரம் என்ன என்று புரிகிறது என்னிடமே தந்திரம் செய்கின்றீர்கள்.
பொதுவாக நாங்கள் பயன்படுத்தும் மூலிகை இது வரை எந்த ஒரு புத்தகத்திலும் வராத ஒன்று தான். மூலிகைகளை குரு வழியாக தான் எங்களுக்கு தெரியவருகிறது. முதலில் என்னிடம் இந்த மூலிகையை பற்றி எந்த ஒரு காரணம் கொண்டும் வெளியில் வரகூடாது என்று சொல்லியுள்ளார் குரு. சாதாரண ஒரு மனிதனுக்கு அந்த மூலிகை கிடைத்தால் அந்த மூலிகையை வைத்தே பல வில்லங்கத்தை செய்துவிடுவார்கள். அப்பாவி பாதிக்கப்படகூடாது.
குருவை வைத்து அனைத்தையும் நீங்கள் கற்றுக்கொள்ளும்பொழுது உங்களுக்கு கிடைக்கும். நெட்டில் வரும் மூலிகையைப்பற்றி ஒரு நாள் நானும் எனது குருவும் உட்கார்ந்து பார்த்தோம். கண்டிப்பாக நான் பயன்படுத்தும் மூலிகை அது கிடையாது. புத்தகத்தை பார்த்து அப்படியே டைப் செய்து அனுப்புகிறார்கள். நீங்களும் அதனை படித்துவிட்டு அதனை தேடிச்செல்லுகிறீர்கள். அதனை வைத்து ஒரு வேலையும் செய்யமுடியாது.
சித்தர்களின் முறையைப்பற்றி கேட்டுள்ளீர்கள். நான் சித்தர்களின் முறையை எப்பொழுதாவது பயன்படுத்துவது உண்டு. எப்பொழுதும் பயன்படுத்தமாட்டேன். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மாதிரி பயன்படுத்துவது உண்டு. ஒரு சில நேரங்களில் முஸ்லீம் மாதிரி செய்துக்கொண்டு இருப்பேன். அனைவரையும் குழப்புவதற்க்காக இப்படி மாற்றி மாற்றி செய்வது உண்டு.
சித்தர்களின் முறையைப்பற்றி கேட்டுள்ளீர்கள். நான் சித்தர்களின் முறையை எப்பொழுதாவது பயன்படுத்துவது உண்டு. எப்பொழுதும் பயன்படுத்தமாட்டேன். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மாதிரி பயன்படுத்துவது உண்டு. ஒரு சில நேரங்களில் முஸ்லீம் மாதிரி செய்துக்கொண்டு இருப்பேன். அனைவரையும் குழப்புவதற்க்காக இப்படி மாற்றி மாற்றி செய்வது உண்டு.
நான் என்ன செய்வேன் என்பது புரிந்துக்கொள்வது கடினம். இதனை ஏன் இப்படி பயன்படுத்துகிறேன் என்றால் தொழில் செய்யும்பொழுது நிறைய எதிரிகள் கூட வருவார்கள். ஒரே மாதிரி செய்யும்பொழுது எளிதில் வீழ்த்த முடியும். பல மாதிரி செய்தால் ஒன்றுமே புரியாமல் திணறிபோய்விடுவார்கள்.
பல வருடங்கள் கற்றதை ஒரே நாளில் கற்றுக்கொள்ளவேண்டும் என்பது உங்களின் ஆர்வத்தை காட்டுகிறது. ஒரு சிறந்த குருவை நாடிக்கற்றுக்கொள்ளுங்கள். நன்றி
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
முதலில் என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி .
அங்காள பரமேஸ்வரி எங்கள் வீட்டு தெய்வம் என்பதால் கேட்டேன்.
மற்றபடி என்னிடம் இருக்கும் புத்தகத்தில் அதன் பதிகங்கள் போற்றிகள்
போன்றவை இருக்கின்றன. உங்களுக்கு அதன் காயத்ரி மந்திரம்
தெரிந்து இருக்கும் என்ற எண்ணத்திலேயே கேட்டேன். வேறு எந்த
தந்திரமும் இல்லை.
sir,
For people who is having second house dasa and 7th house dasa, you asked to say mrithyunjya mantra. how many times we need to say that? what is the procedure.
Also the are 2 mrinthyunjaya mandtrams. Shall we say both mantras or should say one. please clarify.
Post a Comment