Followers

Thursday, February 27, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று ஒரு நண்பர் என்னை சந்தித்தார். அவரும் ஒரு ஆன்மீகவாதி அவர் சந்தித்து பேசும்பொழுது என்னிடம் ஒரு சில குண்டலினியைப் பற்றி கேட்டார். நான்  பதில் சொல்லவில்லை.

எனக்கு புத்தகஅறிவு என்பது சுத்தமாக கிடையாது. அனைத்தும் செய்முறையில் கற்றுக்கொடுத்தார் குரு. என்னிடம் வந்து புத்தகத்தில் இருக்கும் விசயத்தைப்பற்றி கேட்டால் கண்டிப்பாக எனக்கு தெரியாது என்று தான் பதில் சொ்ல்லுவேன்.

சக்தி இருக்கிறது என்று நினைத்தால் தாராளமாக என்னிடம் வந்து பேசும்பொழுது உங்களுக்கு நன்றாக அதனை உணரமுடியும். நீங்களும் ஆன்மீகவாதியாக இருந்தால் அதனை பயன்படுத்திக்கொள்ளமுடியும். ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் ஒரு இடத்தில் ஒரு சக்தி இருக்கிறது என்றால் கண்டிப்பாக அதனை நாமும் பெறவேண்டும் என்று நினைத்து அங்கு சென்று பெறுவார்கள்.

என்னிடம் இருக்கும் சக்தியை பெறவேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக பேசும்பொழுது அதனை உங்களால் பெறமுடிகிறது என்றால் எடுத்துக்கொள்ளலாம். ஒரு ஆன்மீகவாதி சக்தியை எடுப்பதில் தான் மிகபெரிய விசயமே அடங்கி இருக்கிறது. பதிவுக்கு வந்தவர்களில் குறைந்தது ஐந்து பேராவது அதனை உணர்ந்து என்னிடம் எடுத்து உள்ளார்கள். ஆன்மீகவாதி என்று வெளிவேஷம் போட்ட ஒரு ஆள் கூட அதனை பெறமுடியவில்லை.

சக்தியை எடுப்பதில் தான் நிறைய கஷ்டப்படவேண்டும் அப்படி கஷ்டப்பட்டு எடுத்த சக்தியை வீணாக செலவும் செய்துவிடகூடாது. ஒழுங்காக அதனை பயன்படுத்தவேண்டும். இதனை உணருவதற்க்கே பல நாட்கள் நீங்கள் பயிற்சி செய்யவேண்டும். கண்டிப்பாக இப்படி எல்லாம் நீங்கள் வரும்பொழுது தான் ஒரு ஆன்மீகவாதியைப்பற்றி புரியும். சக்தி என்றால் என்ன என்று புரியும். வாழ்க்கையில் நீங்கள் செய்யும் வேலையோடு ஆன்மீகவழியையும் சேர்த்து செய்யும்பொழுது வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்திற்க்கு செல்லலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: