வணக்கம் நண்பர்களே!
ஒரு வாரத்திற்க்கு முன் ஒரு நண்பர் சந்தித்தார். நீங்கள் எப்படி அம்மனை எடுத்தீர்கள். நாங்கள் எப்படி எடுப்பது என்று கேட்டார். அவரிடம் சொன்ன தகவலை உங்களிடம் தருகிறேன்.
மனிதனிடம் இருக்கும் குணங்கள் மூன்று என்று சொல்லுவார்கள். தெய்வீககுணம் மனிதகுணம் மற்றும் மிருககுணம். இந்த குணங்களை மூன்றையும் வைத்த இறைவன் எந்த குணத்தை எடுப்பது என்பதை நம்மிடமே விட்டுவிட்டான். நீங்கள் எப்பொழுதும் தெய்வீககுணத்தில் இருந்தீர்கள் என்றால் யார் வேண்டுமானாலும் உங்களிடம் வருவார்கள். மாறாக மனிதகுணம் என்றால் தன்னை நம்புகிறவனே ஏமாற்றிவிட்டு செல்லுவது மனிதகுணத்தில் நீங்கள் இருந்தால் மனிதர்களும் உங்களை நம்பமாட்டார்கள்.
தன்னை நம்புகிறவனேயே கொன்றுவிட்டு செல்வது மிருககுணம். இதில் மனிதகுணத்தில் இருந்து பிறரும் நம்மை போல் மனிதர்கள் நம்மால் முடிந்த உதவியை செய்யமுடியும் என்ற நிலை வரும்பொழுது அவர்கள் தெய்வீககுணத்தை அடைகிறார்கள். பரதேசியும் அரசனும் ஒன்று என்றும் பார்க்கும் நிலை வரும்பொழுது தெய்வீககுணம் உங்களுக்குள் வரும்.
எளிமையாக சொல்லவேண்டும் என்றால் பிறர் நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களை நேசிக்கிறார்கள என்றால அந்த நிலை தெய்வீகநிலை தான் என்று சொன்னேன்.
பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தி உங்களிடம் வரவேண்டும் என்றால் உங்களின் மனதில் பிரச்சினை இருக்ககூடாது. உங்களின் மனம் குழந்தைபோல் இருககவேண்டும். அப்பொழுது அந்த இடத்தில் பிரபஞ்சசக்தி எளிமையாக வந்துவிடும்.
நீங்கள் பூஜை செய்யும்பொழுது உங்களின் இரண்டு வயதிற்க்குள் உள்ள குழந்தையை அந்த இடத்தில் இருக்கும்பொழுது பிரபஞ்சசக்தி உடனே வரும். காரணம் அந்த குழந்தையின் மனதில் எந்தவித எண்ணங்களும் இல்லை. நாமும் அந்த குழந்தையாக மாறமுடியும் என்றால் எப்பேர்பட்ட சக்தியும் நீங்கள் எடுக்கமுடியும் என்றேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
I agree your point
Post a Comment