வணக்கம் நண்பர்களே!
ஒரு மனிதன் என்ன தான் வாழ்ந்தாலும் அதாவது அனைத்து சுகத்தையும் அனுபவித்தாலும் கடைசி நேரத்தில் அவனுக்கு தீராத ஆசை என்ன என்றால் அது அடுத்த பிறவியிலும் இதேப்போல் பிறந்து அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் எஞ்சி நிற்க்கும்.
அப்படி எண்ணம் ஏற்பட்டவுடனே எப்படி அந்த மனிதனுக்கு மோட்சத்தை கொடுப்பது? மறுபிறவி எடுக்க தான் வைப்பார் கடவுள். மனிதனின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பார் கடவுள் ஆனால் அது எந்த பிறவி என்று சொல்லமுடியாது. உங்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றிவிட்டு தான் உங்களை அவருடன் சேர்ப்பாரே தவிர நிறைவேறாமல் சேர்க்கமாட்டார்.
உங்களின் விருப்பம் அனைத்தும் உங்களின் ஆத்மாவில் படிந்திருக்கும். அதனை வெளிப்படுத்த தக்க சமயம் பார்த்துக்காெண்டு இருக்கும். அந்த மாதிரியான சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பது கடவுளின் வேலை. சூழ்நிலை அமைந்துவிட்டால் ஆத்மா வெளிகாட்ட ஆரம்பித்துவிடும்.
உங்களுக்கு ஒரு விருப்பம் ஏற்படுகிறது என்றால் அது உங்களின் ஆத்மா அதனை கேட்கிறது என்று அர்த்தம். உங்களின் உடலை வைத்து அது திருப்திபடுத்துகிறது. உடலை ஒரு கருவியாக அது பயன்படுத்தும்.
என்னை பொருத்தவரை எதுவும் தவறு என்று சொல்லமாட்டேன். ஏன் என்றால் அவனுக்குள் இருக்கும் ஆத்மாவின் தேடுதலுக்கு அவன் செய்த செயலாக தான் அது இருக்கும். அது தவறு கிடையாது என்பேன். ஒரு சில நேரங்களில் ஆத்மா விபரீதமாக கேட்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் கருவியாக உடலும் காயப்படும் அதனை மீறி ஆத்மாவும் காயப்படும்.
மறுபிறவி தொடரும்...
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Super Sir unga blog la irundhu neraya vishangalai therunjuka mudiyudhu
Gud Sir U Explain nice things i wish u to continue this ...
Post a Comment