வணக்கம் நண்பர்களே!
குரு தசாப்பற்றி பார்த்து வருகிறோம். நாம் காணும் கனவுக்கும் நமக்கு நடைபெறும் தசாவுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. ஒருவருக்கு நடைபெறும் தசாவை பொருத்து அவருக்கு அது சம்பந்தமாக கனவை அந்த தசாநாதன் ஏற்படுத்துவார்.
குரு தசாப்பற்றி பார்த்து வருகிறோம். நாம் காணும் கனவுக்கும் நமக்கு நடைபெறும் தசாவுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. ஒருவருக்கு நடைபெறும் தசாவை பொருத்து அவருக்கு அது சம்பந்தமாக கனவை அந்த தசாநாதன் ஏற்படுத்துவார்.
ஒருவருக்கு குரு தசா நடைபெற்றால் அவர் காணும் கனவு எல்லாம் தெய்வங்களாக தான் இருக்கும். உலகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தையும் நேரில் பார்க்கிறாரோ இல்லையோ கனவில் பார்த்துவிடுவார். கனவிலேயே உலகத்தில் உள்ள அனைத்து கடவுளையும் பார்ப்பார். தரிசனம் கிடைக்கும்.
அனைத்து யாத்திரையும் கனவில் நடைபெறும். பொதுவாக கனவு என்பது நமது பூர்வபுண்ணியத்தை மற்றும் வரும் ஜென்மத்தைப்பற்றி காட்டும் ஒரு கருவியாக தான் இருக்கின்றது. நாம் இருக்கும் தசா வழியாக நமது பூர்வபுண்ணியம் மற்றும் வரும் ஜென்மத்தை காட்டும். குரு தசா நீங்கள் இதுவரை அதாவது முன்ஜென்மத்தில் உள்ள கோவிலை கூட பார்க்கமுடியும் அதுபாேல் பிறவி எடுக்கும் ஜென்மத்தையும் காட்டும்.
ஒருவருக்கு குரு தசா நடைபெறும்பொழுது அவரின் குலதெய்வத்தை கூட காட்டும் நிலை குரு தசாவிற்க்கு உண்டு. நீங்கள் காணும் கனவு வெறும் கனவு மட்டுமே என்று நினைக்காதீர்கள் உங்களுக்கு ஒரு கைடுபோல் அது இருக்கின்றது. குரு தசா வழியாக நீங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து கோவிலையும் பார்க்கமுடியும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Sir,
I am always getting dreams( most of he time) that i am in the temple, worshiping god. My family members used to say, lease dont say any story about templE. They used to laugh at me. But,for me kethu dasa is running. Whatever the temple, i used to see in the dream, shortly i visit that temple
Post a Comment