வணக்கம் நண்பர்களே!
ஒரு முறை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் சென்று இருந்தேன். அதன் அருகில் பழைய புத்தங்கள் கிடைக்கும். ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று சென்று பார்த்தேன்.
ஒருவர் சோதிட புத்தகத்தைப்பற்றி கடைகாரர்களிடம் கேட்டார். அப்பொழுது நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன். நீங்கள் சோதிடரரா என்று கேட்டேன். அவர் இல்லை நான் சோதிட சம்பந்தமான புத்தகங்களை வாங்கி படிப்பேன். எனது தொழில் வேறு என்று சொன்னார்.
அவரிடம் எப்படி சோதிடத்தில் உங்களுக்கு ஆர்வம் வந்தது என்று கேட்டேன். அவர் கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு திடீர் ஆர்வம் வந்தது. அதனால் வேலை இல்லாமல் இருக்கும்பொழுது சோதிடபுத்தகங்களை படிப்பது வழக்கம் என்று சொன்னார்.
அவர் எனக்கு ஒரளவுக்கு சோதிடம் தெரியும். எனக்கு இப்பொழுது பனிரெண்டாவது வீட்டு தசா நடைபெறுகிறது. சுக்கிரன் பனிரெண்டில் இருந்து தசாவை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று சொன்னார்.
அவரிடம் நன்றாக பேசிக்கொண்டிருக்கும்பொழுது சொன்னார். நான் இதோ பக்கத்தில் சர்க்கஸ் பாேட்டுள்ளார்கள் அல்லவா. அந்த சர்க்கஸில் வேலை செய்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். இருவரும் பேசிவிட்டு விடைபெற்று வந்தேன்.
பனிரெண்டாவது வீட்டில் இருந்து தசா நடைபெற்றால் ஒருவருக்கு சர்க்கஸ் கம்பெனியில் வேலை கிடைக்கும் என்பதை அவரைப்பார்த்து தான் நான் தெரிந்துக்கொண்டேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment