வணக்கம் நண்பர்களே!
நமது பதிவுகளை படிக்கும் இளம் சோதிடர்களுக்கு ஒரு சின்ன அறிவுரையை வழங்குகிறேன். இன்றைக்கு அனைவருக்கும் சோதிட ஞானம் நிறைய இருக்கிறது. புத்தகம் மற்றும் நெட் வழியாக நிறைய விசயங்களை படித்து வைத்திருக்கிறீர்கள்.
ஒரு தொழில்முறை சோதிடர்களாக மாறுவதற்க்கு முதல் தகுதி அவர்கள் பல பேர்களின் ஜாதகத்தை அவர்களின் இடத்திற்க்கு சென்று பலனை சொல்லிருக்கவேண்டும். சரி இதனை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை நான் சொல்ல பாேகிற இந்த விசயத்தை கடைபிடித்து வாருங்கள். விரைவில் நல்ல சோதிடர்களாக மாறிவிடலாம்.
இன்றைய காலத்தில் சோதிடத்தை நாம் பார்க்கின்ற இடம் ஒரு தனி அறையாக இருக்கின்றது. அதாவது ஏதாவது ஒரு வீட்டில் வைத்து பார்த்து வருகிறோம். உண்மையில் இப்படி பார்க்கும்பொழுது நமக்கு அந்தளவுக்கு பலனை சொல்லமுடியாது.
நாம் பார்க்கும் இடம் மிக முக்கியமான ஒன்று. அந்த காலத்தில் சோதிடம் பார்க்க ஏதாவது ஒரு இயற்கையான சூழ்நிலையை தேர்ந்தெடுப்பார்கள். இயற்கை நமக்கு ஏதாவது உணர்த்திக்கொண்டே இருக்கும்.
தனிஅறையில் செல்போனை தவிர வேறு எதுவும் உணர்த்தமுடியாது. இயற்கையான இடத்தில் இருந்து சோதிடம் பார்க்கும்பொழுது நம்மிடம் கேள்வி கேட்கும்பொழுது அந்த இயற்கையே பல விசயங்களை நமக்கு காட்டிக்கொடுக்கும். நாம் அதனை உணர்ந்து பலனை சொல்லலாம்.
நீங்கள் வேண்டுமானால் ஒரு முறை ஏதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து சோதிடப்பலனை சொல்லிப்பாருங்கள். அப்பொழுது நீங்கள் சொல்லும் பலன் சரியாக இருக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment