Followers

Monday, August 25, 2014

பிரச்சினை சொல்லிவிடுவது நல்லது


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் என்னிடம் பேசுகிறார்கள். மெயில் செய்து பாராட்டுகிறார்கள் ஆனால் அவர்களின் பிரச்சினை என்ன என்று மட்டும் வருடக்கணக்கில் சொல்லுவது கிடையாது. என்ன காரணம் என்று தெரியவில்லை.

பிரச்சினை பெரிய அளவில் வந்தவுடன் இப்படி மாட்டிக்கொண்டேன் என்று சொல்லுகிறார்கள். நான் உதவுமாட்டேன் என்று நீங்கள் நினைப்பது தவறு. என்னால் முடிந்தளவு உதவமுடியும். என்னை மீறி செல்லும்பொழுது மட்டுமே நானே சொல்லிவிடுவேன் என்னால் முடியாது வேறு இடத்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்பேன்.

என்னிடம் தொழிலுக்கு என்று கேட்டால் மட்டும் அவ்வளவு எளிதில் பேசமாட்டேன். அதற்கு காரணம் அது என்னால் மட்டும் நடப்பதில்லை மற்றப்படி உங்களின் தனிப்பட்ட பிரச்சினைக்கு உடனே தீர்வு என்னால் சொல்லமுடியும்.

உங்களுக்கு பிரச்சினை வந்தவுடன் அதனை எதிர்க்கொள்வது முடியாத ஒன்று ஏன் என்றால் வந்தபிறகு அதன் முழுவீரியத்தையும் காட்டிவிட்டு தான் செல்லும். அடி பலமாக விழும். நாம் குறுக்கே சென்றால் நமக்கும் சேர்த்து விழும். 

ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொருவருக்கும் அதிக பிரச்சினையை கொடுக்க தான் உள்ளதே தவிர அதிக நன்மையை கொடுக்காது. கர்மவினையை அறுப்பதற்க்கு உங்களை பிரச்சி்னையில் மாட்டிவிட்டு கொல்லும். 

மனிதர்களை வெளியில் பார்ப்பதற்க்கு பெரிய அளவில் சந்தோஷத்தோடு இருப்பதாக உங்களுக்கு தெரியும் ஆனால் உள்ளே பார்த்தால் தான் என்ன வெட்டவெளிச்சம் என்று புரியும். அதனால் ஒவ்வொருவரின் பிரச்சினையையும் ஒழிவு மறைவின்றி சொல்லிவிடுவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: