Followers

Friday, August 29, 2014

மும்பையும் விநாயகர் சதுர்த்தியும்


வணக்கம் நண்பர்களே!
                    விநாயகர் சதுர்த்தி இன்று இந்த பதிவை பகிர்ந்துக்கொள்கிறேன். விநாயகர் சதுர்த்தி பிரபலமாக கொண்டுடாடப்பட்டு வருகிறது. கொஞ்ச காலத்திற்க்கு முன்பு எல்லாம் இது அந்தளவுக்கு பிரபலம் ஆகவில்லை. இன்றைய கிராம புறங்களில் கூட படு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.

மகிழ்ச்சியாக இருப்பதற்க்கு ஒரு விழா கிடைத்து இருக்கிறது. விநாயகர் புராணம் எல்லாம் எனக்கு தெரியாது. எனது நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு தகவலை பரிமாறிக்கொண்டார். அந்த தகவலை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

மும்பையில் நல்ல மழை பெய்யும். அளவுக்கு அதிகமாக மும்பையில் மழை பெய்யும்பொழுது அதனை நிறுத்துவதற்க்கு விநாயகரை வழிப்பட்டு கடலில் போடுவது வழக்கம். தமிழ்நாட்டில் அடிக்கிற வெயிலுக்கு விநாயகரை கொண்டு சென்று போடுவதற்க்கு தண்ணீர் கூட இல்லை என்று சொன்னார். 

சாந்தமான கடவுளை சண்டை போடுவதற்க்கு மனிதன் பயன்படுத்திக்கொண்டான். மனிதன் மிகப்பயங்கரமானவன் என்பது இதில் இருந்தே தெரிகிறது. கடவுளை கூட மனிதன் விட்டுவைக்கமாட்டான். மேலே சொன்ன கருத்து உண்மையா அல்லது பொய்யா என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்.

விநாயகர் சதுர்த்தியை அமைதியாக கொண்டாடினால் நீங்களும் மகிழ்வோடு கொண்டாடலாம். பிற மதத்தவரும் அமைதியாக இருப்பார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: