வணக்கம் நண்பர்களே!
வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து ஏதாவது ஒரு அம்மனை வழிப்பட்டு வரசொன்னேன். இதுவரை எத்தனை பேர் இதனை செய்கின்றனர் என்று தெரியவில்லை. அனைவரும் இதனை செய்யவேண்டும் என்று மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன்.
கோவிலுக்கு செல்லும்பொழுது அனைவரும் தூய்மையான கட்டம் இல்லாத ஆடைகளை அணிந்து செல்லவேண்டும். கட்டம் போட்ட ஆடைகளை அணிந்து சென்றால் கோவிலில் இருந்து வரும் சக்தி உங்களின் மேல் வந்து சேராது.
கட்டம் போடாத சட்டையாக இருந்தால் கோவிலில் இருந்து வரும் சக்தி உங்களின் ஆத்மாவிற்க்கு அப்படி கிடைக்கும். இந்த விசயம் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். தெரியாதவர்கள் இதனை கடைபிடித்து வாருங்கள்.
வெளியில் செல்லும்பொழுது கோவில் இல்லாத இடங்களுக்கு செல்லும்பொழுது கட்டம் போட்ட ஆடைகளை அணிந்து செல்லவேண்டும். வெளி இடங்களுக்கு கட்டம் போட்ட ஆடைகள் நல்லது.
ஆடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆடை இருந்தாலும் அதனை நீங்கள் தினமும் துவைத்து போடவேண்டும். இது உங்களை உயர்த்தும் வழி முறைகள் இதனை தவறாது கடைபிடித்து வாருங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Een kattam potta sattai koodathu?
Post a Comment