Followers

Monday, August 4, 2014

இளம் சோதிடர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் சோதிடம் தெரிந்து இருக்கிறது. ஒரு சில மக்கள் சோதிடர்களிடம் சென்று பலனை தெரிந்துக்கொள்வதில் விருப்பம் உடையவர். நன்றாக சோதிடம் தெரிந்தாலும் பிறரிடம் சோதிடம் பார்க்கவேண்டும் என்று ஆர்வம் இருக்கும்.

நீங்கள் பல சோதிட புத்தகங்களை படித்தாலும் நீங்கள் வெளியில் சென்று சோதிடம் பார்க்கும்பொழுது மட்டுமே நிறைய பாடத்தை நீங்கள் கற்றுக்கொள்ளமுடியும். அனுபவ படிப்பு சோதிடத்திற்க்கு மிக இன்றிமையாத ஒன்று.

நீங்கள் அனுபவபடிப்பை படிக்கவேண்டும் என்றால் ஊர் ஊராக சென்று சோதிடம் பார்த்து பலனை சொல்லவேண்டும். அப்படி சொல்லும்பொழுது உங்களுக்கு கிடைக்கும் அறிவு யாராலும் சொல்லிக்கொடுக்க முடியாத ஒரு அறிவாக இருக்கும்.

பணத்தை குறிவைத்து நீங்கள் செல்லவேண்டியதில்லை. நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற குறிக்கோள் உடன் சென்றால் நல்ல அனுபவ அறிவு கிடைத்துவிடும். பல தரப்பட்ட மக்களின் ஜாதகத்தை வாங்கி பார்க்கும்பொழுது ஒவ்வொரு ஜாதகமும் ஒவ்வொரு வாழ்க்கையை  பிரதிபலிக்கும். அந்த அனுபவ அறிவுக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை.

இணையத்தில் சோதிடத்தை படித்து எல்லாம் நீங்கள் சோதிடப்பலனை சொன்னால் ஒரு சில நேரத்தில் தவறி கீழே விழ நேரிடும். அனுபவ அறிவை தேடுங்கள். சோதிடத்தில் சிறக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.