வணக்கம் நண்பர்களே!
வாழ்க்கையை வாழதெரிந்தவர்களிடம் சென்று நீங்கள் தியானம் செய்யுங்கள் என்று கூப்பிட்டால் ஓங்கி அறைந்துவிடுவார்கள். ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்றால் வாழதெரிந்தவர்களுக்கு தியானம் தேவையில்லை.
வாழதெரியாதவர்களுக்கு நீங்கள் தியானத்தை சொல்லிக்கொடுக்கலாம். பொதுவாக தியான வகுப்பிற்க்கு எல்லாம் சென்றால் தியரியாக தான் அனைத்தும் இருக்கும் காரணம் இவர்கள் பல வித விசயங்களை எடுத்த மனது கெட்டு இருக்கும். அந்த மனதை நல்ல வழியில் செல்வதற்க்கு தியரி வகுப்பாக சொல்லிக்கொடுப்பார்கள்.
ஒருவரை இப்படி எல்லாம் வாழலாம் என்று மட்டுமே சொல்லமுடியுமே தவிர இப்படி தான் தியானம் என்று நீங்கள் சொல்லிக்கொடுப்பது கடினம். ஏன் என்றால் அவர் அவர்களின் வாழ்க்கையை அவர்கள் தான் வாழவேண்டும். தியானம் என்பது வாழ்க்கையோடு ஒன்றிய செயல். உங்களின் தனிபட்ட வாழ்க்கையை நீங்கள் தான் வாழவேண்டும்.
நான் வாழ்கிறேன் என்று பார் என்றால் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி பிறர் வந்து பார்க்கமுடியும். அதனால் நீங்கள் தியான வகுப்புக்கு என்று சென்றால் அங்கு தியரியாக மட்டுமே சொல்லுவார்கள். யாரும் தியானம் இருந்து காட்டமுடியாது.
கொஞ்சம் சிந்தித்தால் இதனைப்பற்றி நீங்கள் எளிதில் அறிந்துக்கொள்ளலாம். நீங்கள் நன்றாக வாழ்ந்தாலே அது தியானம் தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment