வணக்கம் நண்பர்களே!
சக்தியை பற்றி எழுதவேண்டும் என்றால் நிறைய எழுதலாம். நிறைய தகவல்கள் என்னிடம் இருக்கிறது. அதனை பொதுவில் எழுதும்பொழுது ஒரு சில பிரச்சினைகள் இருப்பதால் குறைவாக எழுதுகிறேன்.
நமது அம்மனையே எடுத்துக்கொள்ளுங்கள் அதனின் முழுசக்தியும் நீங்கள் பெற்றால் நீங்கள் சூப்பர் மேனாக மாறிவிடுவீர்கள். ஆனால் உங்களின் உடல் தாங்காது. உங்களின் உடல் மிக பலவீனமாக இருக்கும்பொழுது அம்மனின் சக்தியை நீங்கள் பெறுவது கடினம்.
நமது உடல் நல்ல வலுவாக இருக்கவேண்டும். ஒரு சிலருக்கு இதுவே மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடும். சக்தி வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களிடம் கொடுக்கும்பொழுது அவர்கள் மரணத்தை உணருவார்கள். நான் இறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன் என்பார்கள்.
ஒரு உடல் ஐந்து கிலோ தான் தாங்கும் என்றால் அந்த உடலில் ஆயிரம் கிலோவை ஏற்றினால் எப்படி தாங்கும். அதனால் உங்களின் உடலை நன்றாக பேணிகாக்கவேண்டும்.
உங்களின் உடலை இயற்கையாக விளையும் பொருட்களை சாப்பிட்டுவந்தால் சக்தியை தாங்கும் வலிமை உருவாகும். பல முறை இதனை நான் சொல்லிக்கொண்டு வருகிறேன். யார் கடைபிடிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment