Followers

Monday, August 25, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் நமது நண்பர்கள் பேசும்பொழுது சொல்லுவார்கள். எனக்கு கோபம் அதிகமாக வருகிறது அதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்பார்கள்.

கோபம் வருவது மனித இயல்பு. கோபம் எல்லை தாண்டி போககூடாது. எல்லை தாண்டி போகும்பொழுது தான் பிரச்சினை வரும். அதற்கு மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டால் நல்லது.

ஆன்மீகத்தில் இருப்பவர்களே கோபம் வரும். அதனை காட்டிக்கொள்ளமாட்டார்கள். கோபம் என்பது ஒரு வித சக்தி. அந்த சக்தியை ஆக்க வழியில் பயன்படுத்தவேண்டும். அந்த சக்தியை பயன்படுத்திக்கொண்டால் உங்களின் வாழ்க்கையை நல்ல முறையில் உயர்த்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆன்மீகவாதியும் உங்களிடம் சொல்லுவார்கள். கோபம் கூடாது. காமம் கூடாது என்பார்கள். நான் உங்களிடம் சொல்லுவேன். இந்த இரண்டும் இல்லை என்றால் நீ ஆன்மீகத்தில் இருப்பதற்க்கு தகுதி இல்லாதவன்.

இரண்டில் ஒரு சக்தி உங்களிடம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அதனை வைத்து எளிதில் கடந்துவிடமுடியும். நான் எத்தனையோ பேருக்கு அம்மனை வைத்து செய்துக்கொடுக்கிறேன். அவர்களிடம் இந்த இரண்டில் ஒன்று இருக்கும். அப்படி இல்லை என்றால் நான் செய்யும் செயல் உடனே நடக்காது. இந்த இரண்டு சக்தியில் ஒன்றை நீங்கள் எப்பொழுதும் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: