வணக்கம் நண்பர்களே!
பொதுவாக இப்பொழுது எல்லாம் நான் கோவிலுக்கு செல்லுவதில்லை அதற்கு காரணம் இருக்கிறது. எனது குரு அம்மன் உன்னிடம் இருக்கிறது என்று நம்பினால் நீ வேறு இடங்களுக்கு தேடி அலைய வேண்டியதில்லை என்று சொல்லுவார்.
ஒரு சில காலத்தில் நிறைய கோவில்களை நான் சென்று பார்த்த வந்திருக்கிறேன். இப்பொழுது அதிகம் செல்வதில்லை. கோவில்களை சென்று பார்த்தப்பொழுது நமது முன்னோர்களின் ஆற்றலை கண்டு நான் வியந்து இருக்கிறேன். அவர்களை பாராட்ட வேண்டும்.
இன்றைய காலத்தில் கோவிலுக்கு சென்றால் எனக்கு பிரச்சினை வந்துவிடும் என்று நினைக்கிறேன். மரணத்திற்க்கு பயந்து சென்று உட்கார்ந்திருக்கும் முதியோர்களின் இல்லம் போல் கோவில் விளங்குகிறது. வயதானவர்கள் கோவில்களில் கூடி இருக்க காரணம் மரணம் என்ற ஒன்றைக்கண்டு தான். மரணத்தைப்பற்றி சிந்திக்க தொடங்கியவுடன் கோவில்களுக்கு சென்றுவிடுகிறார்கள்.
பிறப்பு வந்தவுடன் மரணம் என்பது நிச்சயக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கவேண்டும். ஒரு மனிதன் தான் வாழ்ந்த வாழ்வில் நிறைவாக வாழ்ந்தால் அவன் மரணத்தை மகிழ்வோடு எதிர்க்கொள்ளவேண்டும். பயந்துக்கொண்டு எதிர்க்கொள்ள கூடாது.
இப்பொழுது உள்ள முதியோர்கள் மரணத்தை பயந்துக்கொண்டு தான் கோவில்களுக்கு சென்று வழிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த பயம் அங்குள்ள சக்தியின் மீது படும்பொழுது அதற்கு குந்தகம் விளையும். அதனை கும்பிடும் நமக்கும் பிரச்சினை ஏற்படும்.முதியோர்கள் நல்ல சக்தியுடன் விளங்க வேண்டும் என்றால் இளமையில் இருந்தே ஆன்மீகப்பயிற்சியை பெற்று இருக்கவேண்டும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment