Followers

Friday, August 22, 2014

நீச்சல்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நாள் கொஞ்சம் பதிவை தள்ளிபோட்டு வெளியிட்டாலும் ஒரே போன்கால்கள் தான் சார் நீங்க இப்பொழுது எல்லாம் பதிவை தருவதில்லை. மணி மைண்ட்டோடு இருக்கிறீர்களா என்று கேட்க ஆரம்பித்துவிடுகின்றனர் நமது நண்பர்கள். கொஞ்சம் சொந்த வேலை இருந்தது. அந்த காரணத்தால் பதிவை தருவதற்க்கு நேரம் ஆகிவிட்டது. எப்படியும் ஒரு பதிவாது வருகிறதே என்று பாருங்கள். சரி சொல்ல வந்த விசயத்தை சொல்லிவிடுகிறேன்.

உடலுக்கு தேவையான உடற்பயிற்சி எல்லாம் நிறைய சொல்லியுள்ளேன். அதில் ஒன்றைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம். நேற்று காலையில் எனது நண்பர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்டில் இருப்பதாக எனக்கு தகவல் சொன்னார்கள். அவர்கள் அனைவரும் வெளியூரில் இருந்து வந்திருப்பதால் அவர்களை சந்தித்துவிட்டு வரலாம் என்று அங்கு சென்றேன்.

அவர்களை சந்தித்து பேசிவிட்டு இருக்கும்பொழுது நண்பர்கள் சொன்னார்கள் வாருங்கள் நீச்சல்குளத்தில் குளித்துவிட்டு வரலாம் என்று கூப்பிட்டார்கள்.நமக்கு நீச்சல் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. சரி என்று கிளம்பிவிட்டேன். 

நாம் தரையில் செய்யும் உடற்பயிற்சியை விட நீரில் செய்யும் உடற்பயிற்சியில் உடல் நன்றாக வளைந்துக்கொடுக்கும். நாம விவசாயி என்பதால் அனைத்து நீச்சல்பயிற்சியும் நன்றாக தெரியும். ஒரு கை இன்றைக்கு பார்த்தவிடலாம் என்று களத்தில் குதித்துவிட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அற்புதமான சந்தோஷம். 

ஆபத்தான ஆறுகளில் கூட நான் நீந்திச்செல்வேன்.  இந்த நீச்சல் குளம் மிகவும் சிறியது இருந்தாலும் பரவாயில்லை சென்னையில் இதுவே மிகப்பெரிய போல் தான் எனக்கு தோன்றுகிறது. நன்றாக நீச்சல்குளத்தில் குளித்தேன்.

இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் நீங்களும் நீச்சல் பழகுங்கள். நீச்சல் பயிற்சி செய்தால் உடல் நன்றாக இருக்கும். உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

இனி அனைவரையும் நீச்சல் குளத்தில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நேற்று நான் நீச்சல் குளத்தில் குளிக்கும்பொழுது பல பெண்கள் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்னை சிங்காரசென்னையாக மாறிவிட்டது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Naanum vivasayi thaan sir aana enakku neechal theriyadhu.