Followers

Thursday, August 14, 2014

புதிய சோதிடர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு ஜாதககதம்பம் வழியாக வரும் வாடிக்கையாளர்களை விட நேரிடையாக நான் பார்த்த வாடிக்கையாளர்கள் அதிகம். இன்று வரை இந்த வட்டம் மிகப்பெரியது. இது எல்லாம் நான் பதிவு எழுதுவதற்க்கு முன்பு நான் பல ஊர்களுக்கு சென்று சோதிடம் பார்த்ததால் வந்த வாடிக்கையாளர்கள். 

அவர்கள் பொதுவாக என்னிடம் சோதிடம் பார்க்க விரும்புவார்கள். எப்படி பார்த்தாலும் ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை என்னை எப்படியும் சந்தித்துவிடுவார்கள். அவர்கள் மறுமுறை சோதிடம் பார்க்க தேவையில்லை என்றாலும் ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை என்னை சந்தித்து அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவத்தை பகிர்ந்துக்கொள்ளும் வாடிக்கையாளர்கள்.

இதனை எதற்க்கு உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் நம்மை ஒரு முறை சந்தித்து விட்டால் நாம் உயிரோடு இருக்கும் வரை நம்மை அவர்கள் சந்திப்பது போல் பழகவேண்டும்.

நான் முதல் முறை சோதிடம் பார்க்கும்பொழுது நம்மை அதிக சந்தேக கண்ணோட்டத்தோடு பார்ப்பார்கள். அடுத்த முறை அந்த சந்தேகம் என்பது நம்மிடம் இருக்காது. நாம் சொல்லும் பலன் அந்தளவுக்கு அவர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கும். 

ஒரு ஊருக்கு சென்று ஒருவருக்கு சோதிடம் பார்த்துவிட்டு வந்துவிடுவேன். கொஞ்ச நாட்களில் அவரின் வழியாக அவர்களின் தெரிந்த வட்டம் அனைத்தும் என்னை தேடி வந்துவிடுவார்கள்.

நீங்கள் சோதிடத்தை தொழிலாக செய்ய விரும்பினால் நான் செய்வது போல் செய்தால் உங்களை தேடி மக்கள் கூட்டம் வந்துக்கொண்டே இருக்கும். முதல் முறை பார்க்கும்பொழுது ஐந்து ரூபாய் கூட உங்களின் சோதிடத்திற்க்கு கட்டணமாக தரலாம். அதனை வாங்கிக்கொள்ளுங்கள். உங்களின் பலன் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுப்பார்கள்.

தெரியாத விசயத்தை தெரியாது என்று சொல்லிவிடுங்கள். அது உங்களின் பெயரை காப்பாற்றும். தெரியாததை தெரிந்தது போல் காண்பித்தால் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள்.

சோதிடப்பலனை கேட்பவர்களை முட்டாள் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். நன்றாக தெரிந்தவர்கள் உங்களை சோதனை செய்வதற்க்கே சோதிடப்பலனை கேட்பார்கள்.

ஜாதககதம்பம் வழியாக வருபவர்களுக்கு நான் டெக்னிக்கல் வார்த்தையை சொல்லுவேன். அதாவது சனி அங்கு இருக்கிறார் குரு அந்த வீட்டில் இருக்கிறார் என்று சொல்லுவேன். சோதிடத்தை பற்றி தெரியாமல் வருபவர்களுக்கு டெக்னிக்கல் வார்த்தை ஒரு வார்த்தை கூட உபயோகிக்கமாட்டேன். பலனை மட்டும் சொல்லிக்கொண்டே வருவேன். டெக்னிக்கல் வார்த்தை தவிர்க்கபடவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: