வணக்கம் நண்பர்களே!
விரைய தசாவில் ஒரு உதாரண ஜாதகத்தை பார்க்கலாம். இவரின் ஜாதகத்தை பாருங்கள். லக்கினம் மகரம். இராசி மகரம். இவரின் லக்கினாதிபதி எட்டாவது வீட்டில் அமர்ந்து இருக்கிறார்.
இவருக்கு தற்பொழுது குரு தசா நடைபெற்று வருகிறது. குரு கிரகம் மூன்றாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டிற்க்கு அதிபதி. குரு ஆறாவது வீட்டில் வக்கிரமாக அமர்ந்துள்ளது. குரு தசா ஆரம்பித்த நாட்களில் இருந்து இவருக்கு நன்றாக சோதிடம் படிக்க ஆரம்பித்துவிட்டார். சோதிடம் நன்றாக இவர்க்கு தெரியும்.
ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு. குரு கிரகம் ஆன்மீகத்தை கொடுத்தாலும் இவர் ஆன்மீகத்தில் சிறந்து விளங்க இவருக்கு நடைபெறும் குரு தசா பனிரெண்டாவது வீட்டிற்க்கும் அதிபதி என்பதால் அவ்வாறு இருக்கிறார். குரு பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து சோதிடம் மற்றும் ஆன்மீகவழியில் நல்ல நிலையில் இருக்கிறார்.
விரைய வீட்டிற்க்கு அதிபதியான குரு கிரகம் இவருக்கு நல்லதை தருகிறது. இவருக்கு குரு தசாவின் சுயபுத்தியில் நிறைய இழந்தார்.அதன் பிறகு வந்த புத்திகள் அனைத்தும் மிக நன்றாக நடைபெறுகிறது. அதாவது பணவசதி மற்றும் மரியாதை எல்லாம் பெற்று தருகிறது. ஆன்மீகத்தில் நல்ல முறையில் உயர்ந்து வருகிறார்.
பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து தசாவை நடைபெற்று வருவதால் அவ்வப்பொழுது உடல்நிலையில் கொஞ்சம் பிரச்சினையை சந்திக்கிறார். குரு ஆறாவது வீட்டில் அமர்ந்து இருப்பதால் உடல் பிரச்சினையை தரும். சின்ன சின்ன பிரச்சினை தரும். அந்த பிரச்சினையை சரி செய்வதற்க்கு மருத்துவமனையை நாடிக்கொண்டிருந்தவர். புதன் புத்தியில் தானே அதற்கு தீர்வு கண்டு வருகிறார்.
ஆன்மீகவாதி என்பதால் மருத்துவமனைக்கு எல்லாம் செல்வது வீண் என்று அவரே அதற்கு தீர்வு கண்டுவருகிறார். இவருக்கு திருமணமும் இப்பொழுது தான் நடைபெற்றது. விரைய வீட்டின் தசாவில் திருமணமும் நடைபெறும். விரைய தசாவில் தான் திருமணம் நடைபெற்றது.
இவர் ஆன்மீகத்தில் நல்ல நிலையில் இருப்பதற்க்கு குரு மட்டும் காரணம் இல்லை. ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் சேர்ந்து ஒவ்வொரு செயலுக்கும் உதவினால் மட்டுமே காரியம் நடைபெறும். மீதி உள்ளவற்றை நீங்களே கணித்து பார்த்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment