Followers

Sunday, August 3, 2014

எதார்த்தம்


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு மிகப்பெரிய கஷ்டமான ஒரு வேலை என்ன என்றால் அது தொழில் அதிபர்களுக்கு ஆன்மீக வழியில் செய்துக்கொடுப்பது மட்டுமே. அதுவும் தமிழர்களுக்கு தொழில் வழியில் ஆன்மீக உதவி செய்வது மிக மிக பெரிய கஷ்டமான வேலை.

என்ன இப்படி தமிழர்களை இவர் சொல்லுகிறார் என்று நீங்கள் கோபப்படாதீர்கள். நம்ம ஆளுங்க அந்தளவு புத்திசாலியாக இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறேன். எதனை செய்தாலும் எந்த வேலை செய்தாலும் அதனை ஒழுங்காக செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான். அப்படி இருக்கும்பொழுது தொழில் செய்பவர்கள் நிலை என்ன என்றால் எந்த வேலையும் ஒழுங்காக செய்வதில்லை.

ஆன்மீகத்தில் ஒரு வேலை செய்வது என்பது கடினமாக இருக்கும். ஒரு தெய்வத்தை வைத்து அதனை வேலை வாங்குவது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. சொன்ன நேரத்திற்க்குள் முடிக்கவேண்டும் என்று மிகுந்த கஷ்டப்பட்டு நான் செய்துக்கொண்டு இருப்பேன்.

இவர்கள் பிராடிக்கலாக செய்ய வேண்டிய வேலையை ஒழுங்காக செய்யாமல் இழுத்து அடிப்பார்கள். என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டால் இதோ செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

எந்த விசயத்திலும் ஒரு வித அலுப்பு இருக்கிறது. தமிழர்கள் முதலில் இதனை மாற்ற வேண்டும். சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்து காரியத்தில் இறங்கவேண்டும். நாம் சரியாக செய்துவிட்டு கடவுளின் சக்திக்கு காத்திருந்தால் உடனே நமக்கு கடவுள் அருள் புரிவார். 

ஒழுங்காக செய்யாமல் கடவுள் உதவி புரிவார் என்று காத்திருந்தால் ஒன்றுமே நடைபெறாது. முடிந்தளவு தமிழர்களை தொழில் வழி ஆன்மீக வழிக்கு உதவுவதை குறைத்துக்கொண்டு வருகிறேன். ஒரு காலகட்டத்தில் ஒரு தமிழர்களும் என்னுடன் இருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: