Followers

Saturday, August 9, 2014

மருதமலை


வணக்கம் நண்பர்களே!
                    இந்த முறை திருப்பூர் சென்று இருந்தபொழுது  நமது நண்பர்களை அழைத்துக்கொண்டு மருதமலைக்கு சென்று இருந்தேன். வழக்கமாக எங்கு சென்றாலும் அங்குள்ள நண்பர்களோடு இப்படி பயணங்கள் சென்று வருவது உண்டு.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மருதமலை கோவில் நன்றாக இருந்தது. இந்த முறை சென்று இருந்தப்பொழுது தரைமுழுவதும் ஒரே டைல்ஸ் மயமாகிவிட்டது. நமது கோவில்களை திட்டமிட்டே அழித்து வருகிறார்கள். இந்தியாவின் பலமே இங்குள்ள கோவில்களில் கிடைக்கும் சக்திதான் என்பதை நன்கு தெரிந்துக்கொண்டு நமது கோவில்களை அழிக்கும்வேலையில் இறங்கியுள்ளார்கள்.

நமது கோவில்கள் எப்படி பழைய காலத்தில் இருந்தனவோ அப்படியே தான் இருக்கவேண்டும். இன்று டைல்ஸ் கிடைப்பதால் அங்கு டைல்ஸ் போடகூடாது. பிரபஞ்சத்தில் இருந்து வரும் சக்தியை பழைய முறையில் கல்லைபோட்டால் தான் அந்த இடத்தில் இருக்கும். 

பல கோவில்களில் குளிர்சாதன வசதியை ஏற்படுத்தி வருகிறார்கள். இதுவும் தவறான ஒன்று. கருவறைக்கு சென்றால் வெப்பமாக தான் இருக்கவேண்டும். அதனை விட்டுவிட்டு நமது சுகத்திற்க்காக இதனை எல்லாம் செய்யகூடாது.

புதிய கோவில்களை கட்டவேண்டாம். இருக்கின்ற சக்தி மிகுந்த கோவில்களை நீங்கள் பாதுகாத்தாலே போதும்.

அறநிலையத்துறையில் உள்ள கோவிலுக்கு சென்றால் தயவு செய்து நீங்கள் அர்ச்சனை செய்வதற்க்கு சீட்டு வாங்காதீர்கள். உண்டியலில் பணம் போடாதீர்கள். நமது பணத்தை எடுத்து நமது கோவில்களை அழிக்கும் வேலையை மிக தீவிரமாக செய்து வருகிறார்கள். பணம் கொடுக்கவேண்டும் என்றால் ஐயரிடம் பணம் கொடுத்து வாருங்கள். அங்கு சுத்தம் செய்யும் வேலையாட்களுக்கு பணத்தை கொடுத்து வாருங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Kovil paniyaalarkalukku panam koduppadhu sani dhosathai pokkuma sir?